தலைமன்னார் மணல் திட்டில் கடற்படையினரால் மீட்கப்பட்ட சிறுவன்
தலைமன்னாருக்கு அப்பால் கடற்பரப்பில் மணல் திட்டில் வழிதவறி சிக்கித் தவித்த 17 வயது சிறுவன் ஒருவரை இலங்கைக் கடற்படையினர் இன்று (11) பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.
வடமத்திய கடற்படை கட்டளைக்குட்பட்ட இலங்கை கடற்படைக் கப்பலான ‘தம்மென்னா’ நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட ரோந்து நடவடிக்கையின்போது, குறித்த கடற்பரப்பில் மணல் திட்டில் சிக்கித் தவித்த சிறுவன் ஒருவர் அவதானிக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், குறித்த சிறுவன் தென்னிந்தியாவில் இருந்து படகு மூலம் இலங்கையை நோக்கி வந்தபோது வழிதவறி மணல் திட்டில் சிக்கியமை தெரியவந்துள்ளது.
கடற்படையினர் சிறுவனை ‘தம்மென்னா’ நிறுவனத்திற்கு அழைத்துச் சென்று, குடிநீர் மற்றும் உணவு உள்ளிட்ட தேவையான மனிதநேய உதவிகளை வழங்கியுள்ளனர்.
மேலும், குறித்த சிறுவன் மேலதிக சட்ட மற்றும் நிர்வாக நடவடிக்கைகளுக்காக தலைமன்னார் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்படவுள்ளதாக இலங்கைக் கடற்படை தெரிவித்துள்ளது.
Reviewed by Vijithan
on
September 11, 2026
Rating:
.jpg)

No comments:
Post a Comment