முல்லைத்தீவில் வெடிபொருட்களைப் பயன்படுத்திப் பிடிக்கப்பட்ட மீன்களுடன் பெண் கைது
இலங்கை கடற்படையினர், மீன்பிடி மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்துடன் இணைந்து முல்லைத்தீவு புதுமாத்தளன் கடற்கரைப்பகுதியில் நடத்திய கூட்டுச் சோதனை நடவடிக்கையின் போது, வெடிபொருட்களைப் பயன்படுத்திப் பிடிக்கப்பட்ட மீன் தொகுதி ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது.
இதன்படி, நேற்று (07) கிழக்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பலான கோட்டாபய நிறுவனம், முல்லைத்தீவு மீன்பிடி மற்றும் நீரியல் வளங்கள் திணைக்கள அலுவலகத்துடன் இணைந்து நடத்திய இச்சோதனை நடவடிக்கையின் போது, புதுமாத்தளன் கடற்கரைப்பகுதியில் மீன்கள் சேகரித்து வைக்கப்பட்டிருந்த சந்தேகத்திற்குரிய இடம் ஒன்று சோதனையிடப்பட்டது.
இதன்போது, வெடிபொருட்களைப் பயன்படுத்திப் பிடிக்கப்பட்ட 3,200 கிலோகிராமிற்கும் அதிகமான மீன் தொகுதியுடன் சந்தேகநபரான பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட பெண் புதுக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த 38 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், சந்தேகநபரான பெண்ணும் மீன் தொகுதியும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக முல்லைத்தீவு மீன்பிடி மற்றும் நீரியல் வளங்கள் திணைக்கள அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
முல்லைத்தீவில் வெடிபொருட்களைப் பயன்படுத்திப் பிடிக்கப்பட்ட மீன்களுடன் பெண் கைது
Reviewed by Vijithan
on
September 08, 2026
Rating:
Reviewed by Vijithan
on
September 08, 2026
Rating:


No comments:
Post a Comment