அண்மைய செய்திகள்

recent
-

MP அர்ச்சுனா உள்ளிட்ட 6 பேருக்கு சமூக வலைத்தள தடை!

  கல்முனை ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் கு. சுகுணன் மற்றும் அவரது குடும்பத்தினர் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பதிவுகளை வெளியிடுவதற்கு பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன், முன்னாள் இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ் உள்ளிட்ட ஆறு பேருக்கு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றம் இன்று (28) இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.


வைத்தியர் சுகுணன் மற்றும் அவரது குடும்பத்தினர் தொடர்பில் வழக்கு முடிவடையும் வரை பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பதிவுகளை வெளியிடக்கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



வழக்கு முடிவடையும் வரை  பதிவுகளை வெளியிடக்கூடாது

கல்முனை ஆதார வைத்தியசாலையில் சுகாதாரப் பணி உதவியாளர்களுக்கான நியமனங்கள் மற்றும் அவர்களின் ஆடை தொடர்பில் ஏற்பட்ட சர்ச்சையைத் தொடர்ந்து, வைத்தியர் சுகுணன் மற்றும் அவரது குடும்பத்தினர் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் அவதூறான கருத்துகள் பதிவிடப்பட்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.



இதுதொடர்பில் அர்ச்சுனா இராமநாதன், முன்னாள் இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ் உள்ளிட்ட ஆறு பேருக்கு எதிராகவும், யூரியூப் மற்றும் பேஸ்புக் தளங்களுக்கு எதிராகவும் நிகழ்நிலை காப்புச் சட்டத்தின் கீழ் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.



வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, ஆறு பேருக்கும் இடைக்காலத் தடை உத்தரவைப் பிறப்பித்த நீதிவான் அண்ணாதுரை தர்ஷினி, அனைவரையும் எதிர்வரும் ஒக்டோபர் 12ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறும் உத்தரவிட்டார்.





MP அர்ச்சுனா உள்ளிட்ட 6 பேருக்கு சமூக வலைத்தள தடை! Reviewed by Vijithan on September 28, 2026 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.