யாழில் இன்று இடம்பெற்ற கோர விபத்தில் பறிபோன பூசகர் உயிர்
யாழ்ப்பாணம் வல்லை வெளி வீதியில் இடம்பெற்ற விபத்தில் பூசகர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
இன்று (28)இடம்பெற்ற விபத்தில் கெருடாவில் பகுதியைச் சேர்ந்த பூசகர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சைக்கிளில் பயணித்த பூசகர்
யாழ்ப்பாணம் - பருத்தித்துறை பிரதான வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பூசகர், வல்லை முனியப்பர் ஆலயத்தில் வழிபாடுகளை முடித்துவிட்டு வீதியை நோக்கி வந்த இளைஞருடன் மோதி வீதியில் விழுந்துள்ளார்.
இதன்போது, அவருக்கு பின்னால் வந்த வாகனம் ஒன்று பூசகர் மீது மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
யாழில் இன்று இடம்பெற்ற கோர விபத்தில் பறிபோன பூசகர் உயிர்
Reviewed by Vijithan
on
September 28, 2026
Rating:
Reviewed by Vijithan
on
September 28, 2026
Rating:


No comments:
Post a Comment