மன்னார் நகரில் கருவாடு விற்பனை நிலையங்களில் விசேட பரிசோதனை
மன்னார் நகரில் நடத்தப்பட்டு வரும் பல கருவாடு விற்பனை நிலையங்கள் இன்று மன்னார் நகர சபையின் சுகாதார வைத்திய அதிகாரி, பொது சுகாதார பரிசோதகர்கள் உள்ளிட்ட சுகாதாரத் துறை அதிகாரிகளால் விசேட பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
இதன்போது, மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற நிலையில் கருவாடு தொகையொன்று களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டது. இதையடுத்து, குறித்த கருவாடு தொகை தடைசெய்யப்பட்டதுடன், அவற்றை விற்பனை செய்வதையும் நுகர்வதையும் தடுக்கும் வகையில் தேவையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
குறித்த கருவாடு தொகை தொடர்பில் மேலதிக நீதிமன்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
பொதுமக்களின் சுகாதாரப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக மன்னார் நகர சபையின் சுகாதாரப் பிரிவினரால் இதுபோன்ற பரிசோதனைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படவுள்ளன.
Reviewed by Vijithan
on
September 09, 2026
Rating:







No comments:
Post a Comment