அண்மைய செய்திகள்

recent
-

பலத்த மின்னல் குறித்த எச்சரிக்கை

 ஊவா, சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களுக்கும், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களுக்கும் பலத்த மின்னல் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து வளிமண்டலவியல் திணைக்களத்தினால் 'அம்பர்' மட்டத்திலான எச்சரிக்கை அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

 

இயற்கை அனர்த்தம் தொடர்பான முன்னெச்சரிக்கை நிலையத்தினால் இன்று (22) நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த அறிவித்தல் இன்று இரவு 11.30 மணி வரை செல்லுபடியாகும்.

 

மேற்குறிப்பிட்ட பகுதிகளில் இன்று மாலை அல்லது இரவு வேளையில் ஆங்காங்கே இடிமின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்பதுடன் பலத்த மின்னல் தாக்குவதற்கான அதிக சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன.

 

இடிமின்னலுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் அப்பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.






பலத்த மின்னல் குறித்த எச்சரிக்கை Reviewed by Vijithan on September 22, 2026 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.