மன்னாரில் இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் கிளை ஏற்பாடு செய்த தியாக தீபம் திலீபனின் 39 வது ஆண்டு நினைவேந்தல்..
தியாக தீபம் திலீபனின் 39 வது ஆண்டு நினைவு நிகழ்வு இன்று (26) காலை 10 மணியளவில் மன்னாரில் உணர்வுபூர்வமாக இடம் பெற்றது..
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மன்னார் கிளை ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நினைவு நிகழ்வில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மன்னார் கிளைத் தலைவர், செயலாளர் மற்றும் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது தியாக தீபம் திலீபனின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவிக்கப் பட்டு, நினைவுச் சுடர் ஏற்றப்பட்டது டன் மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
உணர்வுபூர்வமாக நடைபெற்ற இந்நிகழ்வில், திலீபனின் தியாகத்தை நினைவுகூறும் வகையில் கட்சி உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் தங்களது அஞ்சலியை செலுத்தினர்.
1987-ஆம் ஆண்டு 5 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் இருந்து தன்னுயிரை ஈந்த தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகள் ஆண்டுதோறும் செப்டம்பர் 15 முதல் செப்டம்பர் 26 வரை உணர்வெழுச்சியுடன் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Reviewed by Vijithan
on
September 26, 2026
Rating:


No comments:
Post a Comment