🎉 வருடாந்த மாவட்ட மாணவர் தூதுவர் மாநாடு – 2026 மிகச் சிறப்பாக நிறைவுற்றது! 🎓🛡️
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் (NCPA) வழிகாட்டலின் கீழ், மன்னார் மாவட்டச் செயலக சிறுவர் பாதுகாப்புப் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட “வருடாந்த மாவட்ட மாணவர் தூதுவர் மாநாடு – 2026” இன்று 25.09.2026 மன்னார் மாவட்டச் செயலக JICA கேட்போர் கூடத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இம்மாநாட்டில் மன்னார் மற்றும் மடு கல்வி வலயங்களைச் சேர்ந்த சிரேஷ்ட மாணவர் தூதுவர்கள் மற்றும் அவர்களுக்குப் பொறுப்பான ஆசிரியர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
🏛️ நிகழ்வின் முக்கிய அம்சங்கள்
🔹 உதவி மாவட்டச் செயலாளர் அவர்களின் தலைமையில் நிகழ்வு நடைபெற்றது.
🔹 மேலதிக மாவட்டச் செயலாளர் (நிர்வாகம்) சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தர்
🔹 மாவட்ட சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் அவர்களினால் வரவேற்புரை, நிகழ்வின் நோக்கவுரை மற்றும் சிறுவர் பாதுகாப்பில் மாணவர் தூதுவர்களின் முக்கிய பங்கு தொடர்பான சிறப்புரை வழங்கப்பட்டது. தனது உரையில், பாடசாலை மட்டத்தில் சிறுவர் பாதுகாப்பை வலுப்படுத்துவதில் மாணவர்களின் பங்கேற்பு, சிறுவர் உரிமைகள் தொடர்பான விழிப்புணர்வு, பாதுகாப்பற்ற சூழ்நிலைகளை அடையாளம் காணுதல் மற்றும் தேவையான சந்தர்ப்பங்களில் பொறுப்பான பெரியவர்களிடம் தகவல் தெரிவிப்பதன் முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டது.
🔹 பாடசாலை மற்றும் சமூக மட்டங்களில் சிறுவர் பாதுகாப்பு எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் அவற்றுக்கான தீர்வுகள் தொடர்பாக ஆசிரியர்கள், மாணவர் தூதுவர்கள் மற்றும் பிரதேச சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் தங்களது கள அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.
🔹 மாணவர் தூதுவர்களின் கருத்துக்கள், அனுபவங்கள் மற்றும் புதிய யோசனைகளை வெளிக்கொணரும் வகையில் திறந்த கலந்துரையாடல் அமர்வு இடம்பெற்றது.
🔹 உளநல வைத்திய அதிகாரியினால் மாணவர்களின் உளநலம், பாதுகாப்பு மற்றும் நலவாழ்வு தொடர்பான ஆலோசனைகள் மற்றும் விளக்கங்கள் வழங்கப்பட்டன.
மாவட்ட சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோதரால் உரிமைகள் தொடர்பாக விழிப்புணர்வு வழங்கப்பட்டது
🔹 பொலிஸ் அதிகாரியினால் சிறுவர் பாதுகாப்பு, சட்டரீதியான பாதுகாப்பு மற்றும் அவசரநிலை தொடர்பான முக்கிய விளக்கங்கள் வழங்கப்பட்டன.
🔹 மாணவர் தூதுவர் பிரதிநிதிகள் தங்களது பாடசாலை அனுபவங்கள், எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் சிறுவர் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான முன்மொழிவுகளைப் பகிர்ந்து கொண்டனர்.
💡 “மாணவர்களின் குரல் – பாதுகாப்பான எதிர்காலத்திற்கான வழிகாட்டி”
பாடசாலைகளில் சிறுவர் துஷ்பிரயோகம், வன்முறை மற்றும் புறக்கணிப்பு இல்லாத பாதுகாப்பான, சிறுவர் நேயமான மற்றும் உளநலத்திற்கு ஆதரவான கற்றல் சூழலை உருவாக்குவதில் மாணவர் தூதுவர்களின் பங்களிப்பை வலுப்படுத்தும் முக்கிய தளமாக இம்மாநாடு அமைந்தது.
🌱 மாணவர் தூதுவர்கள் தமது பாடசாலைகளில் சிறுவர் உரிமைகள், பாதுகாப்பு, பொறுப்பு, நலவாழ்வு மற்றும் பாதுகாப்பான பாடசாலைச் சூழல் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான ஊக்கத்தையும் வழிகாட்டலையும் பெற்றனர்.
Reviewed by Vijithan
on
September 26, 2026
Rating:










No comments:
Post a Comment