அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் பேருந்து நிலையத்தில் இலவச ஆணுறை வழங்கும் நடவடிக்கை

 மன்னார் மாவட்டத்தில் பாலியல் ரீதியாக பரவும் நோய்களை கட்டுப்படுத்தும் நோக்கில், பொதுமக்களுக்கு இலவச ஆணுறைகள் வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.


இதற்காக பேருந்து நிலைய வளாகத்தில் இலவச ஆணுறைகள் பெற்றுக்கொள்ளக்கூடிய வகையில் சிறப்பு பெட்டியும் அமைக்கப்பட்டுள்ளது.


பாதுகாப்பான பாலியல் பழக்கவழக்கங்கள் தொடர்பில் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சுகாதாரத்துறையினரால் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.


“வெட்கப்பட வேண்டாம் – பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்” என்ற செய்தியுடன், தேவையுள்ளவர்கள் தயக்கமின்றி ஆணுறைகளை பெற்றுக்கொள்ளுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.












மன்னார் பேருந்து நிலையத்தில் இலவச ஆணுறை வழங்கும் நடவடிக்கை Reviewed by Vijithan on September 17, 2026 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.