அண்மைய செய்திகள்

recent
-

இலங்கைக்கு கடத்துவதற்காக வாகனத்தில் கொண்டு வரப்பட்ட 7.50 லட்சம் வலி நிவாரணி மாத்திரைகள் பறிமுதல் ஒருவர் கைது

 மண்டபம் கடல் வழியாக இலங்கைக்கு கடத்துவதற்காக  வாகனத்தை கொண்டு வரப்பட்ட 7 இலட்சத்து 50 ஆயிரம் வலி நிவாரணி மாத்திரைகள் மரைன் போலீசாரால் நேற்று வியாழன் இரவு பறிமுதல் செய்யப்பட்டதுடன் வாகன  சாரதி கைது செய்யப்பட்டு  சுங்கத்துறையினரிடம் ஒப்படைத்தனர். 


மேலும் வேதாளை கடற்கரையில் கிடந்த  286 கிலோ பீடி இலை பண்டல்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.


ராமநாதபுரம் மாவட்ட கடற்கரைப் பகுதி இலங்கைக்கு மிக அருகில் இருப்பதால் தனுஷ்கோடி, மண்டபம், மரைக்காயர்பட்டினம், குந்துகால், வேதாளை, களிமண் குண்டு உள்ளிட்ட கடற்கரை பகுதியில் இருந்து சர்வதேச கடல் எல்லை வழியாக இலங்கைக்கு கடத்தல் பொருட்கள் கடத்தப்பட்டு வருகிறது. 


இந்நிலையில் வேதாளை கடற்கரையில் இருந்து இலங்கைக்கு கடல் வழியாக படகில்  கடத்துவதற்கு வலி நிவாரணி மாத்திரைகள் சரக்கு வாகனத்தில் கொண்டு வரப்படுவதாக கிடைத்த தகவல் அடிப்படையில் மரைன் காவல் ஆய்வாளர் ஜான்சி ராணி தலைமையில் போலீசார் உச்சிப்புளி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.


அப்போது மண்டபம் நோக்கி வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் 7 இலட்சத்து 50 ஆயிரம் வலி நிவாரணி மாத்திரைகள் இருந்தது தெரிய வந்தது. 


இது குறித்து வாகனத்தை ஓட்டிச் சென்ற நபரிடம் மரைன் போலிசார்  நடத்திய விசாரணையில் வலி நிவாரணி மாத்திரை அனைத்தும் மண்டபம் அடுத்த வேதாளையில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக கொண்டுவரப்பட்டதாக தெரிவித்தார்.


அதன் அடிப்படையில் சரக்கு வாகனத்துடன்  வலி நிவாரணி மாத்திரைகளை பறிமுதல் செய்த மரைன் போலீசார் வாகன ஓட்டுநரை கைது செய்து மண்டபம் மரைன் காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து வழக்கு பதிவு செய்து பின்னர்  வாகனம், வலி நிவாரணி மாத்திரைகள் மற்றும் கைது செய்யப்பட்ட நபர்  மண்டபம் சுங்கத்துறை அலுவலகத்தில் மண்டபம் மரைன் போலீசார் ஒப்படைத்தனர்.


மேலும் வேதாளை கடற்கரையில் சட்டவிரோத கடத்தல் சம்பவம் நடப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் நள்ளிரவு மரைன் போலீசார் கடற்கரை ஓரம் திடீர் ரோந்து சென்ற போது கடத்தல் காரர்கள் மரைன் போலீசார் வருவதை கண்டதும் கடற்கரையில் 286 கிலோ எடை கொண்ட 10 பீடி இலை பண்டல்களை  கடற்கரை ஓரம் வீசிவிட்டு தப்பி சென்றுள்ளனர்.


பீடி  இலை பண்டல்களை பறிமுதல் செய்த மரைன் போலீசார் அதனையும் மண்டபம் சுங்கத்துறை அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.






இலங்கைக்கு கடத்துவதற்காக வாகனத்தில் கொண்டு வரப்பட்ட 7.50 லட்சம் வலி நிவாரணி மாத்திரைகள் பறிமுதல் ஒருவர் கைது Reviewed by Vijithan on October 02, 2026 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.