சாந்திபுரத்தில் கோலாகலமாக ஆரம்பமான “வளரும் நட்சத்திரங்கள் வெற்றிக்கிண்ணம் – 2026” கால்பந்துத் தொடர்!
மன்னார் சாந்திபுரம் பகுதியில் இளைஞர்களின் விளையாட்டுத் திறமைகளை வெளிக்கொணரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள “வளரும் நட்சத்திரங்கள் வெற்றிக்கிண்ணம் – 2026 (3.0)” கால்பந்துத் தொடரின் ஆரம்ப நிகழ்வு நேற்று (01.10.2026) மாலை 4.00 மணியளவில் நடைபெற்றது.
சாந்திபுரத்தில் அமைந்துள்ள Grow Star’s Sports Club Ground மைதானத்தில் நடைபெற்ற ஆரம்ப நிகழ்வில் விருந்தினர்கள், அருட்தந்தையர்கள் மற்றும் விளையாட்டு ஆர்வலர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு தொடரை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தனர்.
தொடர்ந்து, மூன்றாவது தடவையாக நடைபெறும் இவ்வருடப் போட்டித் தொடரில் மொத்தம் 32 அணிகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தவுள்ளன.
இப்போட்டித் தொடர் நேற்று முதல் எதிர்வரும் 04.10.2026 வரை நடைபெறவுள்ளதுடன், சாந்திபுரம் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்களின் விளையாட்டுத் திறமைகளை வெளிக்கொணரும் முக்கிய நிகழ்வாக இது அமைந்துள்ளது.
Grow Star’s Sports Club ஏற்பாட்டில் நடைபெறும் இத்தொடருக்கு விளையாட்டு ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பு கிடைத்துள்ளது.
Reviewed by Vijithan
on
October 02, 2026
Rating:
%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%20%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D..jpg)


.jpeg)



.jpeg)


No comments:
Post a Comment