அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் 2026ஆம் ஆண்டுக்கான இளைஞர் விருது போட்டி!

 மன்னார் புனித சவேரியார் ஆண்கள் கல்லூரியில்  2026ஆம் ஆண்டுக்கான இளைஞர் விருது போட்டி நிகழ்வு தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மன்னார் மாவட்ட பணிப்பாளர் Z.A ஹில்ருதீன் தலைமையில் நடைபெற்றது.


தேசிய இளைஞர் சேவைகள் மன்றமும், மன்னார் மாவட்ட இளைஞர் சேவைகள் மன்றமும் இணைந்து ஏற்பாடு செய்த குறித்த போட்டியில், மன்னார் மாவட்டத்திலுள்ள ஐந்து பிரதேச செயலகப் பிரிவுகளையும் சேர்ந்த இளைஞர், யுவதிகள் கலந்துகொண்டனர்.


இதன்போது நடனம், பேச்சு, அறிவிப்பு, தனிநடிப்பு உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் இடம்பெற்றன. இப்போட்டிகளில் திறமையை வெளிப்படுத்தி வெற்றிபெறும் போட்டியாளர்கள், அடுத்த கட்டமாக நடைபெறவுள்ள தேசிய மட்டப் போட்டிகளில் மன்னார் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி கலந்துகொள்ளவுள்ளனர்.


குறித்த நிகழ்வில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மன்னார் மாவட்ட பணிப்பாளர், இளைஞர் சேவை அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு போட்டியாளர்களை ஊக்குவித்தனர்.


இளைஞர்களின் கலைத்திறன், ஆற்றல் மற்றும் தலைமைத்துவ திறன்களை வெளிக்கொணரும் வகையில் இந்நிகழ்வு அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது









 




















மன்னாரில் 2026ஆம் ஆண்டுக்கான இளைஞர் விருது போட்டி! Reviewed by Vijithan on October 04, 2026 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.