தமாம் நகருக்கான சேவையை தற்காலிகமாக இரத்து செய்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!
பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக கொழும்பு மற்றும் சவூதி அரேபியாவின் தம்மாம் நகருக்கு இடையே இன்று (12) மற்றும் நாளை (13) இயக்கப்படவிருந்த விமான சேவைகளை இரத்து செய்வதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது.
அதன்படி, ஒக்டோபர் 12 மற்றும் 13 ஆகிய திகதிகளில் கொழும்பு மற்றும் தம்மாம் சர்வதேச விமான நிலையத்திற்கு இடையே இயக்கப்படவிருந்த UL253 மற்றும் UL254 ஆகிய விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.
சவுதி அரேபியாவிற்கான அடுத்தடுத்த விமான சேவைகள் குறித்த அறிவிப்புகள் உரிய நேரத்தில் வெளியிடப்படும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
ரியாத் சர்வதேச விமான நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று (11) நடத்தப்பட்ட புதிய தாக்குதலில் ஒருவர் உயிரிழந்ததுடன், சுமார் 11 பேர் காயமடைந்ததாக சவுதி அரேபிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
யேமனின் ஈரான் ஆதரவு ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் 13 பேர் உயிரிழந்தும் 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தும் ஒரு நாள் கழித்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Reviewed by Vijithan
on
October 12, 2026
Rating:


No comments:
Post a Comment