அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் கடலில் வலையில் சிக்கிய ஆமை மீட்பு – மன்னார் மீனவர்களின் மனிதநேய செயல்

 மன்னார் கடலில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட மன்னார் மீனவர்களின் வலையில் சிக்கிய அரிய வகையான கடல் ஆமை ஒன்றை   ஆபத்தில் இருந்து மீட்டு கடலில் விட்ட சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.

 

மீனவர்களின் பெறுமதியான மீன்பிடி வலையில் சிக்கிக் கொண்ட குறித்த கடலாமை தொடர்பாக அறிந்து கொண்ட மன்னார் மீனவர்கள் உடனடியாக வலையில் சிக்கிய குறித்த ஆமையை கடும் போராட்டத்தின் மத்தியில் வலையுடன் தமது படகில் ஏற்றினர்.


பின்னர் குறித்த ஆமை யை ஆபத்தில் இருந்து எவ்வித காயங்களும் இன்றி மீட்கும் வகையில் தமது பெறுமதியான மீன்பிடி வலையை வெட்டி குறித்த ஆமையை மீட்டு மீண்டும் கடலில் விட்டுள்ளனர்.



கடல்வாழ் அரிய வகை உயிரினங்களை பாதுகாக்கும் மன்னார் மீனவர்களின் இந்த மனிதநேய செயல் குறித்த பலதரப்பட்டவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.











மன்னார் கடலில் வலையில் சிக்கிய ஆமை மீட்பு – மன்னார் மீனவர்களின் மனிதநேய செயல் Reviewed by Vijithan on October 05, 2026 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.