அண்மைய செய்திகள்

recent
-

மாவீரர் வாரத்தையொட்டி நானாட்டானில் இடம்பெற்ற மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு

 மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு குழுவின் ஒழுங்கமைப்பில் நானாட்டான் பிரதேச சபை  மண்டபத்தில்   நேற்றைய தினம் புதன்கிழமை(19) மாவீரர்களின் பெற்றோர் மதிப்பளிப்பு நிகழ்வு இடம்பெற்றது.



 நானாட்டான் மற்றும் முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுகளில் உள்ள 45   கிராமங்களில் இருந்து 225 க்கு மேற்பட்ட மாவீரர்களின் பெற்றோர் மற்றும் உரித்துடையோர்களை,கலந்து கொண்டிருந்தனர்.  

 

நானாட்டான் பாடசாலை சந்தியில் இருந்து பொதுப் படம் தாங்கி நடை பவனியாக ஆரம்பமானது.குறித்த நிகழ்வில்   கத்தோலிக்க மத குருக்கள், முன்னாள் போராளிகள்,சமூக செயற்பாட்டாளர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டதோடு,  நிகழ்வு   நானாட்டான் பிரதேச சபை  மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டு நிகழ்வு ஆரம்பமானது.


மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு குழுவின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் முதல் நிகழ்வாக பொதுச்சுடரினை மாவீரர் கலைமதியின் தாயார் திருமதி.செ. ராணி   ஏற்றி வைத்தார்,


பொதுப் படத்திற்கான மலர் மாலையை  மாவீரர் சர்மிலனின் தாயார் திருமதி இ. செபஸ்ரியம்மா அணிவித்தார்.நினைவுச் சுடரினை மாவீரர் புலிக்குட்டி அவர்களின் தாயார் திருமதி. ப. ருக்குமனி ஏற்றி ஆரம்பித்து வைத்தார்.மலர் வணக்கத்தை மாவீரர் இமானின் துணைவியார் ஆரம்பித்து வைத்தார்.


தொடர்ந்து மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

 

தொடர்ந்து நிகழ்வுகள்,சிறப்பு உரைகள் இடம் பெற்றதோடு பெற்றோர்களுக்கு  நினைவு பொருள் வழங்கி வைக்கப்பட்டது.  















மாவீரர் வாரத்தையொட்டி நானாட்டானில் இடம்பெற்ற மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு Reviewed by Vijithan on November 19, 2026 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.