ஜனாதிபதி அநுரவின் 58ஆவது பிறந்த தினம் இன்று; குவியும் வாழ்த்து
இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களின் 58ஆவது பிறந்த தினம் இன்று (நவம்பர் 24) கொண்டாடப்படுகிறது. 1968ஆம் ஆண்டு நவம்பர் 24ஆம் திகதி பிறந்த அவர், இலங்கையின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாகப் பதவி வகித்து வருகிறார்.
இவரது பிறந்த தினத்தை முன்னிட்டு, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அரசியல் தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகள், கட்சி உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் சமூக வலைத்தளங்கள் ஊடாகவும் நேரடியாகவும் தமது வாழ்த்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். அநுர குமார திசாநாயக்கவின் அரசியல் பயணம் பல்கலைக்கழக மாணவர் அரசியலூடாக ஆரம்பமானது.
மக்கள் கொண்டாடும் ஜனாதிபதி
தம்புத்தேகம ஆரம்பப் பாடசாலையில் தனது ஆரம்பக் கல்வியைத் தொடங்கிய அநுர குமார திஸாநாயக்க தம்புத்தேகம மத்திய மகா வித்தியாலயத்தில் இடைநிலைக் கல்வியைக் கற்றார். பின்னர் களனிப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து உயர்கல்வியை கற்றுப் பட்டதாரியானார்.
1987ஆம் ஆண்டில் சோசலிச மாணவர் சங்கத்துடன் இணைந்து அரசியலுக்குள் பிரவேசித்த அவர் 1997ஆம் ஆண்டில் அதன் தேசிய அமைப்பாளர் பதவிக்கு நியமிக்கப்பட்டார்.
2000ஆம் ஆண்டில் முதன்முறையாகப் பாராளுமன்றத்திற்குத் தெரிவான அநுர குமார திசாநாயக்க, 2004ஆம் ஆண்டில் விவசாய அமைச்சராகவும் கடமையாற்றினார். 2014ஆம் ஆண்டில் மக்கள் விடுதலை முன்னணியின் (JVP) தலைமைப் பொறுப்பை ஏற்ற அவர் 2019ஆம் ஆண்டில் தேசிய மக்கள் சக்தி என்ற புதிய கட்சிளை உருவாக்குவதில் முன்னோடியாகத் திகழ்ந்தார்.
2019 ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டு அவர் 3.16 சதவீத வாக்குகளை பெற்றுக் கொண்டதோடு 2024 ஜனாதிபதித் தேர்தல் வெற்றி வரை அவர் பயணித்த அரசியல் பயணம் இலங்கையின் அரசியல் வரலாற்றில் ஒரு சிறப்பான அத்தியாயமாகும்.
பல தசாப்த கால அரசியல் அனுபவங்கள் சவால்கள் தோல்விகள் மற்றும் வெற்றிகளுக்கு மத்தியில் 2024 செப்டம்பர் 22ஆம் திகதி நாட்டின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அநுர குமார திசாநாயக்க தெரிவு செய்யப்பட்டார்.
ஜனாதிபதி அனுர பதவியேற்றது முதல் மூவின மக்காளுக்கும் மிகவும் நேர்மையான ஜனாதிபதியாக, ஊழல் இல்லா ஆட்சியை நடத்தி வருவதுடன், மக்காளின் நலங்காளில் அதிக அக்கறை கொண்டவராகவும் உள்ளார்.
இலங்கை வரலாற்றில் சிறந்த ஒரு ஜனாதிபதியாக பேசப்படும் ஒருவராக வலம் வருவார் என்பது குறிப்பிடத்தக்கது.
Reviewed by Vijithan
on
November 24, 2026
Rating:


No comments:
Post a Comment