இலங்கை தேசிய பூங்காவில் பெண்கள் பிகினி அணிந்துபுகைப்படம்; வெடித்த சர்ச்சை
இலங்கையின் தேசிய பூங்காக்களுக்குள் வணிக நோக்கங்களுக்காக பிகினி அணிந்து புகைப்படங்கள் எடுக்கப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டுகள் குறித்து, சுற்றுச்சூழல் அமைச்சகம் விசாரணையைத் தொடங்கியுள்ளதாகப் பிரதி அமைச்சர் அன்டன் ஜயகோடி உறுதிப்படுத்தியுள்ளார்.
சர்ச்சையின் பின்னணி
வெளிநாட்டுப் பெண்கள் பிகினி அணிந்திருக்கும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பரவியதைத் தொடர்ந்து, பாதுகாக்கப்பட்ட வனவிலங்கு வலயங்களை வணிக நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்துவது குறித்துக் கடுமையான விவாதங்கள் எழுந்துள்ளன.
யால தேசிய பூங்காவிற்கு அருகிலுள்ள தனமல்வில பகுதியில் அமைந்துள்ள 'அனில்கா ரூம்ஸ் அண்ட் ஈகோ எஸ்டேட்' (Anilka Rooms & Eco Estate) என்ற தங்குமிட நிறுவனம், பிகினி மற்றும் பேஷன் புகைப்படங்கள் எடுப்பதை ஊக்குவிக்கும் வகையில் வெளியிட்ட சமூக ஊடகப் பதிவு விவாத்தை ஏற்படுத்தியுள்ளது.
யால, குமன மற்றும் லுணுகம்வெஹெர ஆகிய தேசிய பூங்காக்களுக்குள் இவ்வாறான சட்டவிரோத வணிகப் புகைப்பட நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்பட்டு விசாரணை நடத்தப்பட வேண்டும் என தேசிய விலங்கியல் பூங்கா திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் ஷர்மிளா ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார்
Reviewed by Vijithan
on
November 12, 2026
Rating:


No comments:
Post a Comment