அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் இடம்பெற்ற மாவீரர் பெற்றோர் உரித்துடையோர் மதிப்பளிப்பு .

 மன்னார் மாவட்ட மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு குழுவின் ஒழுங்கமைப்பில் மாந்தை மேற்கு, மன்னார் நகர் பிரதேசத்தைச் சேர்ந்த 55 கிராமங்களில் இருந்து 500 க்கு மேற்பட்ட பெற்றோர்களை  கௌரவிக்கும் நிகழ்வு நேற்று சனிக்கிழமை (21) மன்னார் நகர மண்டபத்தில் இடம்பெற்றது.

 

பேரெழுச்சியுடன் நடந்த இப்புனித நிகழ்வில்  மன்னார் மறைமாவட்ட ஆயர்  அந்தோணி  பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை அவர்கள் சிறப்பாக வருகை தந்து மாவீரர்களின் பெற்றோர்களை வரவேற்கும் நிகழ்வில் பங்கேற்று ,பொது படத்திற்கு மலர் மாலை அணிவித்து வணக்கம் செலுத்தி  ஆசியுரை வழங்கி மதிப்பளித்தார். 


பொதுச் சுடரினை மாவீரர் வசீகரன் அவர்களின் தாயார் திருமதி. சி. அன்ன ரோஸ் சில்வா   ஏற்றினார்.


பொது படத்திற்கான இரண்டாவது மாலையினை மாவீரர் செந்தில் அவர்களின் சகோதரர் ஜெகநாதன்   அணிவித்தார்.நினைவுச் சுடரினை மாவீரர் திருநிலா அவர்களின் தந்தையார் திரு. மருதநாயகம்  ஏற்றினார்.


மலர் வணக்கத்தை இரண்டு மாவீரர்களான எல்லாளன், சுதாகரன் அவர்களின் தாயார் திருமதி .யசிந்தா  ஆரம்பித்து வைத்தார்.தொடர்ந்து வருகை தந்த அனைவரும் சுடரேற்றி , மலர் வணக்கம் செலுத்தும் உணர்வுபூர்வமான நிகழ்வு  இடம்பெற்றது.


இதனைத் தொடர்ந்து மாவீரர்கள் நினைவு சுமந்த உரைகள்,கவிதைகள்,நடனங்கள் உணர்வு மிக்கதாக இடம்பெற்றன.இத்துடன் பெற்றோர்களுக்கு  நினைவுப் பொருட்கள்   வழங்கி வைக்கப்பட்டன.















மன்னாரில் இடம்பெற்ற மாவீரர் பெற்றோர் உரித்துடையோர் மதிப்பளிப்பு . Reviewed by Vijithan on November 22, 2026 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.