அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் நகரசபையின் 2027 ஆம் ஆண்டுக்கான பாதீடு வெற்றி

 மன்னார் நகரசபையின் 2027 ஆம் ஆண்டுக்கான பாதீடு மேலதிக 4 வாக்குகளால் வெற்றி பெற்றுள்ளது.  



மன்னார் நகர சபையின் 18 ஆவது மாதாந்த கூட்டம் இன்றைய தினம் திங்கட்கிழமை (23) காலை 10 மணியளவில் நகர சபையின் தலைவர் டானியல் வசந்தன் தலைமையில் இடம்பெற்றது.


பாதீடு தொடர்பாக நீண்ட விவாதங்களுக்குப் பின்னர் நடைபெற்ற பகிரங்க வாக்கெடுப்பில் 16 உறுப்பினர்களில்   10 உறுப்பினர்கள் ஆதரவாகவும், 6 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்துள்ளனர்.


தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் முழுமையான ஆதரவை வழங்கி இருந்தனர்.


இலங்கை தமிழரசுக் கட்சியை சேர்ந்த நான்கு உறுப்பினர்களில்  ஒருவர் ஆதரவாகவும்  மூவர் எதிராக வாக்களித்தனர் .மன்னார் நகரசபையின் 2027 ஆம் ஆண்டுக்கான பாதீடு மேலதிக 4 வாக்குகளால் வெற்றி பெற்றுள்ளது.  











மன்னார் நகரசபையின் 2027 ஆம் ஆண்டுக்கான பாதீடு வெற்றி Reviewed by Vijithan on November 23, 2026 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.