அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லத்தில் உணர்வு பூர்வமாக இடம்பெற்ற மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வு- பல ஆயிரக்கணக்கானோர் உணர்வு பூர்வமாக பங்கேற்பு

 தமிழ் மக்களின் விடுதலைக்காக தம் உயிரை தியாகம் செய்த வீரர்களை நினைவு கூறும் ‘மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வு’  இன்று வெள்ளிக்கிழமை (27) மன்னார் ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லத்தில் மிகவும் உணர்வு பூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.  


இன்று வெள்ளிக்கிழமை  (27) மாலை 6.5 மணியளவில் இரண்டு மாவீரர்களின்    தந்தையால் பொதுச் சுடர்   ஏற்றப்பட்டது.


அதனைத் தொடர்ந்து மாவீர்களின் பெற்றோர்கள், உறவினர்கள், முன்னாள் போராளிகள்,  , மத தலைவர்கள் ஆகியோர் கலந்து கொண்டு மலர் தூவி, ஈகைச் சுடர் ஏற்றி உணர்வு பூர்வமாக உயிர் நீத்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.


இறுதி கட்ட யுத்தம் நிறைவடைந்த போது 2009 ஆம் ஆண்டு மன்னார் மன்னார் ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லம் இராணுவத்தினால் கைப்பற்றப்பட்டு உடைத்து சேதமாக்கப்பட்டது.


மாவீரர் துயிலும் இல்லத்தில் உடைக்கப்பட்ட கல்லறைகள் , கற்கள் ஆங்காங்கே சிதறி காணப்பட்ட போது இதனை ஓரிடத்தில் குவித்து மாவீர்களின் பெற்றோர்கள் தொடர்ச்சியாக அஞ்சலி நிகழ்வை நடத்தி வந்திருந்தனர்.


இந்த நிலையில் இம்முறை குறித்த மாவீரர் துயிலும் இல்லம் புனரமைக்கப்பட்டு மாவீரர் தின நினைவேந்தல் குழுவின் ஏற்பாட்டில் மாவீரர்களின் பெற்றோர்,உறவினர்கள்,முன்னாள் போராளிகள் இணைந்து மிகவும் உணர்வுபூர்வமாக மாவீரர் தினத்தை நினைவு கூர்ந்தமை குறிப்பிடத்தக்கது.















மன்னார் ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லத்தில் உணர்வு பூர்வமாக இடம்பெற்ற மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வு- பல ஆயிரக்கணக்கானோர் உணர்வு பூர்வமாக பங்கேற்பு Reviewed by Vijithan on November 27, 2026 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.