நாட்டின் பல பகுதிகளுக்கு மின்னல் தொடர்பில் முன்னெச்சரிக்கை அறிவிப்பு!
இயற்கை பேரிடர்கள் தொடர்பான முன்னெச்சரிக்கை மத்திய நிலையத்தினால் நாட்டின் பல பிரதேசங்களுக்கு மின்னல் தொடர்பான முன்னெச்சரிக்கை அறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.
இன்று (03) பிற்பகல் 01:00 மணிக்கு ஆரம்பமான இந்த எச்சரிக்கை அறிவித்தல் நாளை (04) அதிகாலை 01:00 மணி வரை செல்லுபடியாகும்.
இக்காலப்பகுதியில் குறித்த பிரதேசங்களில் ஆங்காங்கே பலத்த மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்படக்கூடிய பிரதேசங்கள்:
அனுராதபுரம் - அனுராதபுரம் புதிய நகரம், இப்பலோகம, கஹட்டகஸ்திகிலிய, கெக்கிராவ, கெபிதிகொல்லாவ, கலென்பிந்துனுவெவ, திரப்பனை, பதவிய, பலாகல, பலுகஸ்வெவ, மதவாச்சி, மிகிந்தலை, ரம்பேவ, ஹொரவ்பத்தானை
அம்பாறை - அட்டாளைச்சேனை, உஹன, தமன, திருக்கோவில், தெஹியத்தகண்டிய 1, தெஹியத்தகண்டிய 2, நாமலோய, நிந்தவூர், பதியதலாவ, பொத்துவில், மகாஓயா, லஹுகல, சம்மாந்துறை
கேகாலை - அரநாயக்க, மாவனெல்லை
கிளிநொச்சி - கண்டாவளை, கரைச்சி
குருநாகல் - இப்பாகமுவ, கணேவத்தை, பொல்பிதிகம, மல்லவப்பிட்டிய, மாவத்தகம, ரீதிகம, வாரியப்பொல
திருகோணமலை - அனைத்து பிரதேச செயலகப் பிரிவுகளும்
நுவரெலியா - கொத்மலை, வலப்பனை, ஹங்குரன்கெத்த
பொலன்னறுவை - அனைத்து பிரதேச செயலகப் பிரிவுகளும்
பதுளை - அனைத்து பிரதேச செயலகப் பிரிவுகளும்
மட்டக்களப்பு - ஏறாவூர்ப்பற்று, கோரளைப்பற்று, கோரளைப்பற்று வடக்கு, போரதீவு பற்று, மண்முனை வடக்கு, மண்முனை தென்மேற்கு, மண்முனை மேற்கு
கண்டி - அனைத்து பிரதேச செயலகப் பிரிவுகளும்
மாத்தளை - அனைத்து பிரதேச செயலகப் பிரிவுகளும்
முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான், புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு
மொனராகலை - கதிர்காமம், படல்கும்புர, பிபில, புத்தல, மடுல்ல, மெதகம, வெல்லவாய, சியம்பலாண்டுவ
யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு
வவுனியா - நெடுங்கேணி, வவுனியா தெற்கு (தமிழ்), வவுனியா தெற்கு (சிங்களம்)
Reviewed by Vijithan
on
November 03, 2026
Rating:


No comments:
Post a Comment