மன்னாரில் அச்சுறுத்தலுக்கு மத்தியில் தொடரும் போராட்டம்....இ.சாள்ஸ்நிர்மலநாதன் பா.உ
மன்னாரில், கடற்படையினரால் அபகரிக்கப்பட்டு தற்போது கடற்படை முகாமாக மாறியுள்ள தமது நிலத்தை மீட்டு தங்களை மீள்குடியேற்றம் செய்ய வலியுறுத்தி மக்கள் மேற்கொண்டு வரும் போராட்டம் 4நாளாகவும் இன்று தொடர்கிறது.
முள்ளிக்குளம் மக்கள் மேற்கொண்டு வரும் இந்த போராட்டத்திற்கு கடற்படையினர் தொடர்ந்தும் அச்சுறுத்தல் விடுத்து வருவதாகவும், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களை புகைப்படம் எடுப்பதாகவும் போராட்டகாரர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் போராட்டகாரர்கள் தெரிவிக்கையில்,
இரவு நேரங்களில் புகைப்படம் எடுத்தல், வீதிக்கு முன்வந்து மக்களை புகைப்படம் எடுத்தல், கடற்படை முகாம் நுழைவாயிலில் அதிகளவான கடற்படையினர் ஒன்று கூடி கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற மக்களை அவதானித்தல்,
போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற மக்களுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டம் இடம்பெறும் இடத்திற்கு வருகின்ற பிரதிநிதிகளை புகைப்படம் எடுத்தல் மற்றும் அவர்களின் விபரங்களை பதிவு செய்தல் போன்ற நடவடிக்கைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றனர் என தெரிவித்துள்ளனர்.
மேலும் கடற்படையினர் எவ்வாறான அச்சுறுத்தல்களை தமக்கு விடுத்தாலும் நாங்கள் போராட்டத்தை கைவிடப்போவதில்லை எனவும், நிலம் மீட்க்கப்படும் வரை போராட்டம் தொடரும் என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை போராட்டத்திற்கு அருட்தந்தையர்கள், மீனவ அமைப்புக்களின் பிரதி நிதிகள், தொண்டு அமைப்புக்களின் பிரதி நிதிகள், மாகாண சபை உறுப்பினர் வைத்தியர் ஜீ.குணசீலன், மன்னார் நகர சபையின் முன்னாள் உறுப்பினர் எஸ்.ஆர்.குமரேஸ், மன்னார் பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் உள்ளிட்ட பலர் நேரடியாக சென்று மக்களை சந்தித்து கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற மக்களுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
கௌரவ வன்னி பாராளுமன்ற உறுப்பினர் இ.சாள்ஸ்நிர்மலநாதன் அவர்கள் மக்களை சந்தித்து அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து அதற்கா தீர்வு மிகவிரைவில் எட்டப்படும் என்று கூறினார்.

மன்னாரில் அச்சுறுத்தலுக்கு மத்தியில் தொடரும் போராட்டம்....இ.சாள்ஸ்நிர்மலநாதன் பா.உ
Reviewed by Author
on
March 26, 2017
Rating:

No comments:
Post a Comment