தமிழர்கள் தனியாக நிற்கும் சூழல் மீண்டும் உருவாகும்....
சிங்கள தேசம் எமது சமாதானக் கரங்களை எட்டி உதைக்குமேயானால் நிச்சயமாக நாம் மீண்டெழுந்து மீண்டும் தனியாக நிற்கவேண்டிய சூழ்நிலை ஏற்படும் என வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் சி.சிவமோகன் தெரிவித்தார்.
முல்லைத்தீவு சிலாவத்தை இளம்பறவை விளையாட்டுக் கழகம் நடத்திய மின்னொளியிலான கால்பந்தாட்டத் தொடர் அண்மையில் குறித்த கழக மைதானத்தில் இடம்பெற்றது.
அதில் விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது:
முள்ளிவாய்க்கால் பேரவலத்திலிருந்து மீண்டெழுவோமா? என்று நாமே சந்தேகப்பட்ட காலம் இருந்தது.
ஆனால் இன்றோ, எமது இனம் அதிலிருந்து மீண்டு சமாதானமான சூழலில் வாழ்வதற்குரிய அரசமைப்பு தயார் செய்யப்பட்டுக்கொண்டிருக்கிறது.<அதிலே எமக்குத் தேவையான காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள், எமக்கான வடக்கு கிழக்கு இணைந்த பூர்வீக பிரதேசம் இவை அனைத்தையும் ஒன்றிணைத்த தீர்வு எமக்குத் தீர்வாகக் கிடைக்குமா? இல்லையா? என்ற ஓர் இக்கட்டான நிலையில் இன்று நாம் உள்ளோம்.
நாம் எதிர்பார்த்துக் காத்திருக்கும் அவை கிடைக்காது போனால் நிச்சயமாக நாம் மீண்டெழுந்து தனியாக நிற்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்பது நிதர்சனம். எந்தவொரு இனமும் தன்னைத் தக்கவைத்துக்கொள்வதற்காக எதிர்த்து நிற்கும். அதேபோல் உரிமைகோரி எதிர்த்து நின்ற எமது இனமும் அடக்கப்பட் டது.
அந்த அடக்குமுறைக்கு எதிராகப் போரைப் புரிந்து எமது மாவீரர்கள் தங்களது இன்னுயிர்களை ஈர்ந்தனர்.
இன்று அவர்கள், தமிழர்களை விடுதலையை வேண்டி நிற்கும் ஓர் இனமாக உலகத்துக்கு அடையாளம் காட்டியுள்ளனர்.
எனவே அவர்களின் இழப்புகள் ஒருநாளும் வீண்போகாது எனத் திண்ணமாக நம்புகிறேன்– என்றார்.
தமிழர்கள் தனியாக நிற்கும் சூழல் மீண்டும் உருவாகும்....
Reviewed by Author
on
October 24, 2017
Rating:

No comments:
Post a Comment