அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில்-எதிர்காலத்தில் கல்வி செயற்பாடு எப்படி அமையவேண்டும்-படங்கள்

வடமாகாணத்தில் மன்னாரில் எதிர்காலத்தில் கல்வி செயற்பாடு எப்படி அமையவேண்டும் என்பதுபற்றிய தொணிப்பொருளில் ஒரு நாள் பயிற்சிப்பட்டறை நிகழ்வானது  தலைமன்னார் பிரதான வீதியில் அமைந்துள்ள ஆங்கிலவளநிலைய மண்டபத்தில் சனிக்கிழமை 01-12-2018 சிறப்பாக நடைபெற்றது.

OPENE  நிறுவனத்தின்  மன்னார் இணைப்பதிகாரி திரு.ராகா அவர்களின் தலைமையில் இவ்நிகழ்விற்கு கல்வியும்  வேலைவாய்ப்பும் தொடர்புபட்ட அரச அரசசார்பற்ற நிறுவனத்தின் அதிகாரிகள் கலந்து கொண்டனர் மூன்று விதமான தலைப்புகளில் விவாதிக்ககப்பட்டது
வளவாளர்களாக
  • திரு.Dr.N.எதிர்வீரசிங்கம்- (எதிர் காலத்தில் கல்வியில் கொண்டுவரப்படவேண்டிய விடையங்கள்)ஓய்வு பெற்ற பல்கலைக்கழக விரிவுரையாளர் ஆசிரிய ஆலோசகர்
  • திரு.K.சர்வேஸ்வரன்-(ICT இல் உள்ள  சந்தர்ப்பங்கள்)COMPUTER SCIENCE -யாழ்பல்கலைக்கழக விரிவுரையாளர்
  • திரு.J.யூட் வோல்ரன் (தொழில்நுட்பக்கல்வியும் எதிர்காலமும்) இயக்குநர்-CEO UNIVERSITY COLLEGE OF JAFFNA
இந்த மூன்று விடையங்களை மையப்படுத்தி மாணவர்களினது கல்வியினையும் வாழ்க்கைத்தரத்தினையும் எவ்வாறு மேம்படுத்தல் வேண்டும் அதற்கான நடவடிக்கைகள் என்ன என்பது பற்றிய கலந்துரையாடலில்
இலங்கையில் உள்ள கல்வி வழங்கும் பல்கலைக்கழகங்கள் கல்லூரிகள் தொழில்நுட்பக்கல்லூரிகள் பாடசாலைகள் பயிற்சிக்கலாசாலைகள் என்பனவற்றின் துறைவாரியான கற்கும் பாடப்பரப்புக்கள் அதன் மூலம் மாணவர்களின் எதிர்காலத்தினையும் தொழில்வாய்ப்பினை ஏற்படுத்திக்கொடுக்க என்ன செய்யலாம் என்பது பற்றிய வினாவின் போது
  • மாணவமாணவகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தல்(துறைவாரியாக)
  • பெற்றோருக்கு தெளிவு ஏற்படுத்தல்
  • பொதுவாக மாணவர்களுக்கான இலவச ஆலோசனை மையம் அமைத்தல்.
  • பயிற்சியின் பின் அல்லது கற்றலின் பின் வேலைவாய்ப்பினை ஏற்படுத்திக்கொடுத்தல்.
  • கற்றலுக்கு ஏற்ற சூழலை உருவாக்குதல் 
  •  தொழில்முறைக்கல்வி....
இன்னும் பல நல்ல கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது இவற்றினை அடிப்படையாக வைத்துக்கொண்டு இருக்கும் வளங்களை எப்படி எங்கு நடைமுறைப்படுத்துவது என்பதுதான் தற்போது நமக்கு இருக்கும் பெரிய சவால் அதற்கு மாணவர்கள் ஆசிரியர்கள் பெற்றோர்கள் பெரியவர்கள் என அனைவரும் ஒன்றினைந்து செயலாற்றவேண்டும் என்பதே முடிவாகும்.
திட்டங்கள் வகுத்து திறம்பட செயலாற்றினால் திறமையான மாணவசமூகத்தினை உருவாக்கலாம்…
-வை.கஜேந்திரன்-






































மன்னாரில்-எதிர்காலத்தில் கல்வி செயற்பாடு எப்படி அமையவேண்டும்-படங்கள் Reviewed by Author on December 02, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.