அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மாவட்டத்தின் விளையாட்டு விஞ்ஞான மற்றும் உடற்கல்வி துறைக்கான முதலாவது கலாநிதி பெ.புவனேந்திரன்


கலைஞனின் அகம் கணணியில் முகம் இப்பகுதியில் விம்பம் ஊடாக நம்மைக்காண வருகின்றார் மன்னார் மாவட்டத்தில் விளையாட்டு விஞ்ஞான மற்றும் உடற்கல்வி துறைக்கான முதலாவது கலாநிதியான பெ.புவனேந்திரன் அவர்களின் அகத்திலிருந்து .

தங்களைப்பற்றி---
எனது சொந்த இடம் மன்னார் மண்ணின் வட்டக்கண்டல் பாலப்பெருமாள் கட்டு கிராமமாகும் அப்பா பெருமாள் அம்மா சிவகாமி குடும்பத்துடன் உறவுகளுடன் மகிழ்ச்சியாக சமூகசேவையில் ஈடுபாட்டுடன் செயலாற்றி வருகின்றேன். யுத்த காலங்கள் கடந்தும் எனது மேற்படிப்புக்காக இந்தியா சென்று எனது கலாநிதி பட்டயக்கல்வியை 15-02-2019 முடித்து தாய்நாடு திரும்பியுள்ளேன்.

கலாநிதி பட்டயக்கல்வியினை நிறைவு செய்தபோது தங்களின் மனநிலை பற்றி…
கல்வியை கற்கும் போது வெறும் சான்றிதழுக்காகவும் பெருமைக்காகவும் கற்றுக்கொள்ளக்கூடாது. கல்வியானது எனது வாழ்வின் வளர்ச்சிக்கும் என் மூலம் பிறரின் வளச்ச்சிக்கும் சரியான முறையில் பயன் உள்ளதாக இருக்கவேண்டும்.அந்த எண்ணத்துடன் கற்றேன் செயலாற்றுவேன்.

மன்னார் மண்ணின் விளையாட்டு விஞ்ஞான மற்றும் உடற்கல்வி துறைக்கான முதலாவது கலாநிதி எனும் போது தாங்கள் உணர்வது….

மகிழ்ச்சியாக உணர்கின்றேன் மன்னார் மண்ணின் விளையாட்டு துறைக்கதன கலாநிதி இல்லை என்ற பெரும் வெற்றிடத்தினை நிரப்பிவிட்டேன்.

கலாநிதியான தங்களின் கருத்து இளைஞர் யுவதிகளுக்கு…
நாம் எந்த துறையைக்கற்றாலும் அந்த துறை மூலம் எமது சமுதாயத்தினை ஆரோக்கியமானதும் அறிவுப்பூர்வமான வழியில் கொண்டு செல்வது ஒவ்வொரு இளைஞர் யுவதிகளின் தலையான கடமையாகும்.
சிறந்த கல்வியால் சிறப்பான சமுதாயத்தினை கட்டியெழுப்பலாம் அது இளைஞர்களின் கையில் தான் உள்ளது.

தங்களின் வாழ்வில் மறக்கமுடியாத விடையம் என்றால்…
வேறொன்றும் இல்லை நான் விளையாட்டு விஞ்ஞானம் மற்றும் உடற்கல்வி யோகாவில் கலாநிதி பட்டம் பெற்றதுதான்.

உங்களது துறை பற்றி....
எனது விருப்பமான துறையாக HAND BALL-கைப்பந்து உள்ளது இத்துறையில் நான் விசேட சிறப்பு பட்டயக்கல்வியை முடித்துள்ளேன் அதனாலும் அது தொடர்பாக நூல் ஒன்றும் வெளியிட்டுள்ளேன். கைப்பந்தானது வடமாகாணத்தில் விளையாடப்படுவது இல்லை அதை வடமாகாணத்தில் கொண்டுவருவதே எனது பெருவிருப்பாகும்.

தற்போது இருக்கின்ற கல்வி முறையானது மாணவருக்கு வேலைவாய்ப்பினை பெற்றுக்கொடுப்பதில்லை பற்றி…
உண்மைதான்  இந்நிலைக்காரணம் தனியார் பல்கலைக்கழகங்கள் இலங்கையில் இல்லை பாடசாலைக்கல்வி தரமாக இருப்பதினால் பல்கலைக்கழகம் போகின்றார்கள் பல்கலைக்கழகத்தின் அவர்களின் நிலை தரமானதாக இருக்கின்றதா…என்றால் அது கேள்விக்குறிதான் இலங்கையை பொறுத்தமட்டில்  வைத்தியராகவோ பொறியிலாளராகவோ வந்தால் அதற்கு பின் தங்களை உயர்த்திக்கொள்ள எவரும் விரும்புவதில்லை உயர்த்திக்கொள்ளும் அளவுக்கு கல்வித்துறையும் இல்லை... வெளிநாடுகளில் அப்படியல்ல வைத்தியரான ஒருவர் அந்த துறையில் தன்னை மேலும் உயர்த்திக்கொண்டு செல்லும் அளவுக்கு பல்வேறு கல்வித்துறைகள் உள்ளது வாய்ப்பும் உள்ளது எமது நாட்டில் அவ்வாறான வாய்ப்புக்கள் இல்லையே…

தாங்கள் இந்தியா கர்நாடகாவில் பல்கலைக்கழகத்தில் கலாநிதி பட்டம் பெற்றுள்ளீர்கள்..இலங்கை பல்கலைக்கழக பட்டதாரிகளுக்கும் வெளிநாட்டில் பட்டப்படிப்பை முடித்த பட்டதாரிகளுக்கும் இடையில் முறுகல் நிலை பற்றி…
இருக்கலாம் எனக்கு தெரியாது ஆனால் ஒரு துறைசார்ந்து உயர் கல்வியை வெளிநாட்டில் பெறுவது அவரவர் திறமைதான் ஒவ்வொரு நாடுகளும் தரமான கல்வி முறையைத்தான் கொண்டுள்ளது இதில் புரிந்து கொள்ளவேண்டிய விடையம் என்னவென்றால் கற்கின்றவர்கள் தரமான முறையில் கற்கின்றார்களா… என்பதுதான். நானும் வெளிநாட்டில் கலாநிதி பட்டம் பெற்றேன் அந்த பட்டத்திற்கான ஆய்வுகள் பல செய்து வெளிப்படுத்தி கலாநிதி பெற்றுக்கொண்டேன் அந்தக்கலாநிதி பட்டம் மூலம் தான் எமது நாட்டின் ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் 03 ஆண்டுகள் விரிவுரையாளராக பணியாற்றியுள்ளேன. தரமாக கற்றால் போதும்.தரமாக கற்பிக்கலாம்.

இலங்கையில் ஒலிம்பிக்பதக்கம் பெறத்தகுதியான வீரர்கள் இல்லையா….
ஏன் இல்லை நிறையவே இருக்கின்றார்கள் சரியான விரர்களை சரியாக தேர்வு செய்யாமையே காரணம் என்பேன்.
தகுதியானவர்களை தேர்வு செய்து அவர்களுக்கு பயிற்சியசிரியர் களம் அமைத்து முழுமையான பயிற்சிகளை வழங்கினால் நிச்சயமாக ஒலிம்பிக்கில் இலங்கை பல பதக்கங்களை பெறும் என்பதில் சந்தேகம் இல்லை.
மன்னார் மாவட்ட விளையாட்டு நிலை பற்றி...
மன்னார் மாவட்டம் அன்று நல்ல முறையில் விளையாட்டில் இருந்தது தற்போது குறைவாகத்தான் உள்ளது. இதற்கு பலகாரணங்களாக பொருளாதாரம் குடும்பநிலை வீரர்களின் ஊட்டசத்து  வீரர்களுக்கு விருப்பமின்மை இவற்றினை அரசாங்கம் கருத்தில் கொண்டு மாவட்ட ரீதியில் உள்ள சிறந்த விளையாட்டு வீரர்களை தேர்வு செய்து அவர்களுக்கான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்தால் சிறப்பான விளையாட்டு வீரர்களை உருவாக்கலாம். அத்தோடு புலமைப்பரீட்சையில் சித்தியடைந்தால் மாதாந்த கொடுப்பனவு கொடுப்பது போல சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு கொடுப்பனவுகள் வழங்கப்படுமானால் விருப்பத்துடன் விளையாடுவார்கள்.

இந்த நேரத்தில் நன்றியுடன் நினைப்பவர்கள் பற்றி…
முதலில் இறைவனுக்கும் எனது பெற்றோருக்கும் உறவுகளுக்கும் எல்லா வழிகளிலும் உதவிபுரிந்த எனது ஆசிரியர்கள் பெரியோர்கள் நண்பர்கள் அனைவரையும் இந்த நேரத்தில் நினைவில் கொள்கின்றேன்.

பல்கலைக்கழங்களில் விளையாட்டுத்துறை சரியான முறையில் செயற்படகின்றதா…
இல்லை என்று தான் சொல்ல வேண்டும் வெறுமனே கற்றல் செயற்பாடுகள் தான் உள்ளது விளையாட்டு விஞ்ஞானம் செல்லில் தான் செயல் அளவில் இல்லை அதற்கு  ஒவ்வொரு துறையில் இருக்கினற துணைவேந்தர்கள் விரிவுரையாளர்கள் பேராசிரியர்கள் அதிகாரிகள் ஆணைக்குழு உறுப்பினர்கள் துறைசார்ந்தவர்கள் முன்வரவேண்டும் மக்கள் நல்லவற்றுக்கு என்றும் துணையிருப்பர்.

தாங்கள் நிறைவு செய்த பட்டப்படிப்புக்கள் பற்றி....

PH.D -Doctor of Philosophy in Physical Education and Sports Science, 2019 Kuvempu University India 

M.P.E-Master of Physical Education and Sports Science, 2007Lakshmibai National College of Physical Education and Sports Sciences Sports Authority of India -University of Kerala, India 

B.P.E-Bachelor of Physical Education and Sports Science, 2005 Department of Physical Education and Sports Sciences Annamalai University, India

 கல்விப்பயிற்சிகள்....
  •  D.Y.S-Diploma in Yoga, 2004Department of Yoga -Annamalai University, India
  • Level -1Anthropometrist,(ISAK)-International Society for the Advancement of Kinanthropometry, 2018
  • Computer-Certificate in Computer Literacy, Global Computers, Arni, India, 2008
  • Secretary-Jaffna District Handball Association, 2013
  • MemberGlobal Human Research and Welfare Society,Since 2017
  • English Course Essential Business English Course,British Council in Colombo,Sri Lanka,2015
 விருப்பமான துறைகள்---
  • Sports Psychology, System of Physical Eduation, Sports Training, Yogic Science, Sports Sociology, Sports Physiology, Sports Injuries and Medicine, Coaching Education, Teaching Methods in Sports Educationetc.
  •  Teaching and Coaching in Football, Volleyball,Yoga and Handball.
  •  Research projectin Sports Scienceand Physical Education i.e., Anthropometric Measurements, Motor Fitness, Sports Physiology, Sports Psychology, Sports Sociology and Sports Management. 
 பணியாற்றிய பணித்தளங்களும் அனுபவமும்-
  •  I worked as a Lecturer (Temporary)at Sports Science and Management Degree Program, Faculty of Applied Sciences, University of Sri Jayewardenepura, from 21.01.2014 to 10.02.2016.
  •  I worked as a Football Coach(Part Time) at University of Sri Jayewardenepura from 2014 and 2015.
  •  I worked as an Academic Sub Wardenat Medical hostel, 42/2, Ratnapitiya, University of Sri Jayewardenepura from 01.01.2015 to 29.02.2016.
  •  I trained up the Football team of University of Sri Jeyawardenepura, Became Champion of KotelawalaDefense University footballtournament in 2015.And also secured the 3rdposition in an Inter University football tournament in 2015.
  •  I have worked asa Lecturer (Temporary)at the Sports Science Unit, University of Jaffna, from 30thApril 2012 to 30thApril 2013.ACHIVEMENTS & POSITION OF RESPOSIBILITY
  •  I worked as a Sports Club Liaison Officer at Handicap International, Vavuniya from 10thJan 2012 and till 29thApril 2012.
  •  I worked as a Physical Education Teacher cum Football coach at the Montfort Anglo Indian College, Yercaud, India. 2008-2011.
  • I worked as a Physical Education Teacher cum Football coach at Saint John’s International College, Chennai, India. 2007-2008.
  •  Caption of Handball Team of LNCPE which is the winnerof the Kerala intercollegiate tournament.2006-2007.
  • Participated in all India University matches representing for Kerala University in Handball team in 2005-2007.
  • Member of the team which won the Tamilnadu & Pondicherry inter Physical Education Football and Hand ball tournament in 2004 2005.
  • Participated Tamilnadu & Pondicherry state level Yogasana competition in 2004
  • Captain and member of the team which won the higher secondary Football championship held at Tiruvanamalai district in 2001-2002
  • Member of the team, whichgot second place of the school level Volley ball championship in Tiruvanamalai in 2000 2001
எனது வெளியீடுகளும் ஆய்வுக்கட்டுரைகளும்....


  • A textbook in“Handball Game” in January 2013-ISBN:9789554416208
 Research Papersin Reputed Journals 
1.P. Buvanendiran and N.D. Virupaksha (2018). An investigation of motor fitness variables among team game elite athletes. International Journal of Yogic, Human Movement and Sports Sciences, 3(1), 1201-1203. ISSN: 1201-1203 
2.P. Buvanendiranand N.D. Virupaksha (2018). Analysis of selected anthropometric variables among elite athletes. European Journal of Biomedical and Pharmaceutical Sciences, 5(4), 1073-1077. ISSN 2349-8870 
3.P. Buvanendiranand N.D. Virupaksha (2018). A comparison of anthropometric measurements among elite team games male players. International Journal of Physiology, Nutrition and Physical Education, 3(1), 1847-1850. ISSN: 1847-18504 
4.P. Buvanendiranand N.D. Virupaksha(2018). An investigation of mood states among elite team games male players. Star Research Journal Physical Education, 6(4), 28-31. ISSN: 2321-676X 
5.P. Buvanendiranand N.D. Virupaksha(2018). An investigation of anthropometric measurements among elite athletes. Indian Journal of Physical Education, Sports and Applied Science, 8(2), 22-29. ISSN: 2229-550X, 2455-0175 
6.Dr. S. Shivakumarand P. Buvanendiran(2018). Influence of regional diversity on health awareness of high school boys in Karnataka State. International Journal of Physiology, Nutrition and Physical Education, 3(2), 1055-1057. ISSN: 2456-0057
 7.Dr. S. Shivakumarand P. Buvanendiran(2018). Analyze of health awareness among high school students of different educational divisions in Karnataka State. International Journal of Yogic, Human Movement and Sports Sciences, 3(2), 826-828. ISSN: 2456-4419 
8.P. Buvanendiran(2013). Effect of yogic practices on flexibility among school boys. International Journal of Movement Education and Sports Science. 1(11), 10-13. ISSN:2321-7200 
9.P. Buvanendiran(2013). The effect of pre-season training package on the selected physical fitness variables of handball players. International Journal of Health, Physical Education and Computer Science in Sports, 11(1), 119-122. ISSN:2231-3265 
10.P. Buvanendiran(2013). Impact of yogic practices on abdominal strength among school girls.International Journal of Advanced and Innovative Research, 2(8), 9-13.ISSN: 2278-7844 

11.P. Buvanendiran(2013).Relationship of playing ability between physical fitness components among Mannar district men soccer players. Global Research Analysis, 2(8), 166-167.ISSN:2277-8160 
12.P. Buvanendiran (2013). Impact of sports participation and psychological training on adression among the St. Johns college students in Jaffna.Global Research Journal of Pharmaceutical Sciences, 2(2), 1-4. ISSN: 2319-877X5 
13.P. Buvanendiran (2013). Analysis of pre-competition sports anxiety among handball and volleyball players.International Journal of Pharmaceutical and Biological Archives, 4(2), 1231-1236. ISSN:0976-3333 
14.P. Buvanendiran(2013). Effect of plyometric training on explosive power of basketball players.Indian StreamsResearch Journal, 3(8), 1-3, ISSN:2230-7850 

 15.P. Buvanendiran(2013). Effect of plyometric exercise on physical fitness components speed in soccer players.Research Scholar, 3(3), 195-198. ISSN:2249-6696Peer


 Reviewed Conference Proceedings and Paper Presentations 
 கலந்து கொண்ட மாநாடுகளும் ஆய்வு முன்மொழிவுகளும்....

1.P.Buvanendiran (2018).Physiological variables of elite male athletes in Sri Lanka. Global Conference on Physical Education and Sports Sciences. Indian Federation Computer Science in Sports, Journal of Physical Education and Sports Sciences,Acharya Nagarjuna University, xxvii-xxxiii. ISSN: 2229-7049
 2.P. Buvanendiranand N.D. Virupaksha(2018). Exploring psychological variables between elite male basketball and handball athletes. International Conference on Contemporary Movements in Sports Tourism, Management, Research, Sports and Yogic Sciences, University of Mumbai, 411-414.ISSN: 0975-5020 
3.P. Buvanendiranand N.D. Virupaksha(2018). Assessment of mood state on elite team game athletes. Conference on Modern Perspectives of Sports Science and Yoga for the Enhancement of Sports Performance, Bharathidasan University, 58-61. ISSN: 9789353004910 
4.P. Buvanendiran and N.D. Virupaksha (2018). A psychological differential to play and victory between elite athletes. International Conference on Focus on Mindfulness: Glimpses of Neuroscience Education, Alagappa University, vol.1 : 387-389. ISBN: 978-8192-8690-87
 5.P. Buvanendiranand N.D. Virupaksha (2017). Analysis of selected motor fitness variables among team game players. Conference on Sports for Humanism, Physical Education and Sports Science. Mangalore University, vol.2 : 31-34.ISSN: 2229-70496
 6.P.Buvanendiran(2014). Effect of aerobic dance on physiological parameters among adult females.3rdInternational Conference Eastern University of Sri Lanka.The paper has been published in the proceedings. 
7.P.Buvanendiran(2013).Effect of selected yogic practices on muscular endurance of school boys.National Seminar on Yoga TowardsEnhancement in Sports. Seethalakshmi Ramaswami College, Bharathidasan University, India. The paper has been published in the proceeding.  

RESOURCE PERSON / WORKSHOPS----
  • Participated as a Resource Person in National Conference on “Modern Perspectives of Sports Science and Yoga for the Enhancement of Sports Performance”organized by the Department of Physical Education, Ganesar College of Arts and Science, Bharathidasan University, India on 3rdMarch 2018. 
  • Participated as a Resource Person in InternationalConference on“Contemporary Movements in Sports Tourism, Management, Research, Sports and Yogic Sciences”organized by Ramniranjan Jhunjhunwala College, University of Mumbai, Indiaon 19th-20thJanuary 2018. 
  • Participated in aeight day national level workshop on “Statistical Analysis for Business Research” organized by Department of Management Studies, Pondicherry University, Indiafrom 3rd-10thof January 2018.  
  • Participated in an International workshop on “Physical Education and Sports Science”organized by Nizam College, Osmania University, Hyderabad, India on 10thOctober 2018.
  • Participated as a Resource Personin a workshop on “Talent Identification for sports” which was organized by the MannarSecretariat, in collaboration with Annamalai University of India on 08.01.2013.
  • Participated as a Resource Personin a workshop on “Introduction of Handball game” organized by St. Johns. College, Jaffna, Sri Lankaon 12.12.2012.
  • Facilitatedan “Advanced Tennikoit Training”program organized by Handicap International (NGO) in Vavuniya, Sri Lankaon 26.03.20137
  •  Participated in the pre conference workshop on “Basic Life Support & Spine Injury” organized by Alva’s College of Physical Education, MangaloreUniversity,India on 13thOctober 2017. 
  • Participated in a workshop on “Implementation of Semester Scheme in B.Ed. Course” organized by the Faculty ofEducation, Kuvempu University, India on 15thFebruary 2016.  
  • Participated in a workshop on “Curriculum Designing”organized by University of Jaffna, (UGC of Sri Lanka) under the staff development programon 11.03.2013 and also 26.04.2013 -27.04.2013. 
  • Participated in a national workshop on “ScienceofFootball”organisedbyLNCPE, University of Kerala, 2007.
  • Participated in a national workshop on“ModernTrents inVolleyballorganisedbyLNCPE, University of Kerala, 2007.
  •  Participated in a national workshop on “Wholistic Sports Medicine”organised byLNCPE, University of Kerala,2007. 
  • Participated in international level workshop on Danni’s NationalGymnasticorganisedbyLNCPE, University of Kerala, 2006.

மன்னாரின் செயல்வீரன் நியூமன்னார் இணையம் பற்றி…
உண்மையில் வரவேற்க கூடிய விடையம் இவ்வாறு நேர்காணல் கண்டு வெளிக்கொணர்வது அந்த துறையில் சாதித்வருக்கு உச்சாகத்தினையும் சாதிக் துடிப்பவர்களுக்கு உத்வேகத்தினையும் ஊக்கமளிக்கும் சிறப்பான செயலாகும்  இச்சேவையினை இடைவிடாது செயலாற்றும் தங்களுக்கும் தங்களது இணையத்திற்கும் வாழ்த்துக்கள் என்றும்.

சந்திப்பு -வை.கஜேந்திரன்-   
 






           



-V.KAJENTHIRAN-
மன்னார் மாவட்டத்தின் விளையாட்டு விஞ்ஞான மற்றும் உடற்கல்வி துறைக்கான முதலாவது கலாநிதி பெ.புவனேந்திரன் Reviewed by Author on March 09, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.