மன்னாரில் திறக்கப்படவுள்ளது-காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம்
காணாமல்போனோர் தொடர்பான பணியகத்தின் வடக்குக்கான முதலாவது பிராந்திய அலுவலகம் மன்னாரில் திறக்கப்படவுள்ளது.
இந்த அலுவலகம் இம்மாதம் 30ஆம் திகதி திறக்கப்படவுள்ளதாக பணியகத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்.
தெற்கில் மாத்தறை மாவட்டத்தை மையப்படுத்தி கடந்த 2ஆம் திகதி இந்த அலுவலகம் திறக்கப்பட்டது.
வடக்கு, கிழக்கு தெற்கு உட்பட நாட்டில் 8 பிராந்திய அலுவலகங்களை அமைப்பதற்குத் திட்டமிட்டுள்ள காணாமல்போனோர் பணியகம், இதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் இவ்வருடத்துக்குள் இறுதிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கையின் இணை அனுசரணையுடன் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் பிரகாரமே காணாமல்போனோர் பணியகம் அமைக்கப்பட்டது.
பணியகத்துக்கான தலைவர் மற்றும் ஏனைய உறுப்பினர்களை 2018 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 29ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்திருந்தார். கடந்த காலத்தில் காணாமல்போனோர் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக விபரங்களை அறிந்துகொள்ளவும், தகவல்களை உறவினர்களுக்குப் பெற்றுக்கொடுப்பதே இக்குழுவின் நோக்கமாகும்.

Reviewed by Author
on
March 09, 2019
Rating:

No comments:
Post a Comment