அண்மைய செய்திகள்

recent
-

மன்னார்,யாழ்ப்பாணம் உட்பட பல தமிழர் பகுதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!! -


இலங்கையின் பல பகுதிகளில் அதிகளவான வெப்பத்துடன் கூடிய காலநிலை நிலவும் என வளிமண்டவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.
வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணத்திலும் புத்தளம் மாவட்டத்திலும் அதிக வெப்பமான காலநிலை நிலவும் என திணைக்களம் இன்று அதிகாலை விடுத்துள்ள வானிலை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
குறிப்பாக யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், திருகோணமலை, அனுராதபுரம், அம்பாறை, புத்தளம், பொலநறுவை, மட்டக்களப்பு மாவட்டங்களில் 32 முதல் 41 பாகை செல்சியஸ் வெப்பநிலை பதிவாகும் என எதிர்பார்ப்பாக்கப்படுகின்றது.

இந்த வெப்பநிலை மேலும் அதிகரிக்கும் அபாய நிலை காணப்படுகிறது. 54 பாகை செல்சியஸ் வெப்பநிலையை கடந்தால் பல்வேறு ஆபத்துக்கள் ஏற்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கம்பஹா, கொழும்பு, களுத்துறை, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, மொனராகலை, மாத்தளை மாவட்டங்களில் 27 - 32 பாகை செல்சியஸ் வெப்பபநிலை காணப்படும்.

கேகாலை, கண்டி, நுவரெலியா, பதுளை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய வெப்பநிலை இல்லை என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
அதிகளவான வெப்பநிலையில் இருந்து தப்பிக்க அதிகளவான நீர் அருந்துமாறும், வெயில் உச்சம் கொடுக்கும் போது வெளி இடங்களுக்கு செல்வதனை தவிர்க்குமாறும் பொது மக்களிடம் வளிமண்டவியல் திணைக்களம் கேட்டுள்ளது.

மன்னார்,யாழ்ப்பாணம் உட்பட பல தமிழர் பகுதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!! - Reviewed by Author on March 07, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.