அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய வளைவு அமைக்க மன்னார் பிரதேச சபையிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது.

மன்னார் மாந்தை பகுதியில் திருக்கேதீஸ்வர ஆலயத்துக்கான வளைவு (தோரணம்) அமைப்பதற்கான விண்ணப்பத்துக்கு மன்னார் பிரதேச சபை அனுமதி வழங்குவதற்கான எந்த ஆட்சேபனையும் கிடையாது. ஆனால் இது ஒரு மதப்பிரச்சனையாக தோன்றியிருப்பதால் முதலில் சபை உறுப்பினர்கள் சம்பவ இடத்தைப் பார்வையிட்டபின் சம்பந்தப்பட்டவர்களின் கருத்தக்களையும் பெற்று இது சம்பந்தமாக தீர்மானம் மேற்கொள்வது என சபையில் தீர்மானிக்கப்பட்டது.

மன்னார் பிரதேச சபையின் 13 வது மாதாந்த அமர்வு இதன் தவிசாளர்
எஸ்.எச்.எம்.முஐhஹீர் தலைமையில் புதன் கிழமை (17.04.2019) நடைபெற்றது.

இவ் கூட்டத்தில் இவ் சபையைச் சார்ந்த 21 பிரதேச சபை உறுப்பினர்களும்
கலந்து கொண்டனர்.

இவ் சபை அமர்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பைச் சார்ந்த பி.கதிர்காமநாதன்
தீர்மானம் ஒன்றை முன்வைக்கையில்  திருக்கேதீஸ்வர ஆலய வீதியில் வளைவு ஒன்றை அமைக்க அனுமதிகோரி விண்ணப்பம் அனுப்பப்பட்டுள்ளது. அகவே இவ் சபைக்கு கிடைக்கப் பெற்றிருக்கும் இவ் அனுமதி கோரலுக்கு சாதகமான பதிலாக அனுமதி வழங்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

இதற்கு தவிசாளர் எஸ்.எச்.எம்.முஜாஹீர் தனது கருத்தை தெரிவிக்கையில் இது விடயமாக தெரிவிக்கையில் கடந்த காலத்தில் மன்னார் பகுதியில் நினைத்த நினைத்த இடங்களில் தெய்வச் சிலைகள்,சுரூபங்கள், வளைவுகள்
அமைக்கப்படுவதால் பாரிய பிரச்சனைகள் தலைதூக்கப்படுவதை கருத்தில் கொண்டு மன்னார் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பிரதேச செயலாளர்களின் அனுமதியின்றி எந்த இடத்திலும் சிலைகளோ, சுரூபங்களோ அல்லது வளைவுகளோ அமைக்கவோ அல்லது புனரமைக்கவோ முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் திருக்கேதீஸ்வர வளைவு சம்பந்தமாக ஏற்கனவே மன்னார் பிரதேச சபையால் அனுமதி வழங்கப்பட்டிருந்தபொழுதும் அன்றைய நிலையில் அப்பகுதியில் சம்பவ இடத்தில் மனித புதைகுழி ஒன்று கண்டுப்பிடிக்கப்பட்டு அகழ்வு பணிகள் இடம்பெற்றமையால் அவ் வீதி போக்குவரத்துக்கு தடைசெய்யப்பட்டிருந்தது. இதனால் இவ் திட்டம் அங்கு முன்னெடுக்க முடியாத நிலையில் காணப்பட்டிருந்தது.

ஆனால் தற்பொழுது அவ் அனுமதி காலம் தாழ்த்தப்பட்ட நிலையில் மீண்டும்
அனுமதி கோரப்பட்டு இதற்கு வீதி அபிவிருத்தி திணைக்களம், மன்னார் பிரதேசசெயலாளர் ஆகியோர் அனுமதி கொடுக்கப்பட்ட நிலையில் அவ் இடம் மன்னார் பிரதேச சபை எல்லைக்குள் இருப்பதால் எமது அனுமதி கோரப்பட்டுள்ளது. ஆகவே இதற்கு சபையின் அனுமதியை கோரி நிற்கின்றேன் என்றார்.

இதற்கு சபையில் சிலர் கருத்துக்கள் தெரிவிக்கையில் மன்னார் பகுதியில் இவ்விடயம் இரு சமயங்களுக்கிடையே பாரிய பிரச்சனையாக இருந்து வருகின்றது. மதங்களுக்குள் மட்டுமல்ல அரசியல் பின்னனியும் காணப்பட்டு வருகின்றது.

எம்மை பொருத்தமட்டில் இவ் சபைக்குள் நாம் இன, மத வேறுபாடின்றி செயல்பட்டு வருகின்றோம். நாம் அனைவரும் தமிழ் பேசும் மக்கள். நாம் எமது
செயல்பாட்டால் எமது மக்கள் மத்தியில் பிரிவினையை கொண்டுவரக்கூடாது.

ஆகவே இவ் வளைவு அமைப்பதற்கு அனுமதி வழங்குவதில் எவருக்கும் ஆட்சேபனை இருக்காது. இருந்தும் நாம் உடன் இதில் தீர்மானத்தை மேற்கொள்ளாது சம்பவத்தை முதலில் பார்வையிட்டபின் இது சம்பந்தமாக முக்கியஸ்தர்களுடன் உரையாடியபின் இதற்கான தீர்மானத்தை மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அடுத்துவரும் கூட்டத்தில் இதற்கான தீர்மானத்தை எடுப்பதென சபையில் தீர்மானிக்கப்பட்டது.
 





மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய வளைவு அமைக்க மன்னார் பிரதேச சபையிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது. Reviewed by Author on April 19, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.