அண்மைய செய்திகள்

recent
-

முடிந்தால் நிரூபித்து காட்டுங்கள்! அத்துரலியே ரத்ன தேரருக்கு ரிசாட் சவால் -


முஸ்லிம் அரசியல் தலைவர்களுக்கு எதிராக முன்வைத்துவரும் குற்றச்சாட்டுக்களை நீதிமன்றத்தின் ஊடாக நிரூபித்துக் காட்டுமாறு முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீன் சவால் விடுத்துள்ளார்.
அத்துரலியே ரத்ன தேரருக்கு அவர் இவ்வாறு சவால் விடுத்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் குறித்த விசாரணைகளுக்கு ஒருபோதும் இடையூறு விளைவிக்கவில்லை.

அத்துடன், தாம் உள்ளிட்ட முஸ்லிம் அமைச்சர்கள் எந்தவொரு குற்றமும் இழைக்கவில்லை என்பதை ஜனாதிபதியும், பிரதமரும் அறிந்து வைத்திருப்பதாகவும் ரிசாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
இன்று திட்டமிடப்பட்ட குற்றங்களை தடுக்கும் பொலிஸ் குற்றப்புலனாய்வுப் பிரிவுற்குச் சென்று வாக்கு மூலம் ஒன்றை வழங்கிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டு போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்டிருந்த அவர், “எனக்கு எதிராக பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைத்கு ஊடகளிலும் பிரசாரங்கள் வெளியாகி இருந்தன.

அவற்றிற்கு எதிராக முறையிட்டிருந்த நிலையில் அதுகுறித்த மேலதிகத் தகவல்களை பெற்றுக்கொள்ளவே இன்று அழைக்கப்பட்டிருந்தேன். ஊடகங்களில் உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலுக்குப் பின்னர் பொய்யான குற்றச்சாட்டுக்கள் எனக்கு எதிராக முன்வைக்கப்பட்டிருந்தன.
சதொச வாகனங்கள் பயன்பாடு குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச பலதரப்பட்ட குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தார். இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் குறித்து முறையிட்டிருந்தேன்.
அன்றைய தினம் பொலிஸ்மா அதிபரிடமும் முறையிட்டிருந்தேன். எந்தவொரு பிழையும் நான் செய்யவில்லை. உண்மை வெல்லும்.
எனக்கும் அல்லது எனது குடும்பத்தாருக்கும் 3000 ஏக்கர், 7000 ஏக்கர் என்று காணிகள் இருப்பதாக அண்மைக்காலமாக சிலர் கூறிவந்தனர். இறுதியாக 8000 ஏக்கர் வரை அந்த எண்ணிக்கை சென்றது. ஆனால் அவ்வாறு எனக்கு எந்தவொரு காணியும் இல்லை.

நான் வளைத்துப்போட்டதாக கூறப்படுகின்ற காணிகள் இவ்வாறு இருந்தால் அவற்றை அரசுடைமையாக்குமாறு நானே நாடாளுமன்றத் தெரிவுக்குழு முன்பாக கூறியிருக்கின்றேன். வில்பத்து வனவிவகாரத்தில் ரத்தன தேரர் பல வருடங்களாக இதனை கூறிவருகின்றார்.
எனக்கு எதிராக முறைப்பாடு செய்து வழக்கு தொடர்ந்து நீதிமன்றத்தின் ஊடாக அதனை நிரூபித்துக் காண்பிக்குமாறு ரத்ன தேரருக்கு நான் கூறுகின்றேன்.

ரத்ன தேரர் அன்று உண்ணாவிரதம் இருந்தபோது இன்னுமொரு தேரர் அங்கு சென்று முழு நாடுமே தீப்பற்றி எரியப்போகிறது என்று எச்சரித்ததை அடுத்து நாடு அழிவுப்பாதைக்கு செல்லாமல் நாட்டின் நற்பெயர் பாதிக்கப்படாமல் சுறறுறலாத்துறையை கருத்திற்கொண்டு மற்றும் இனங்களிடையே ஐக்கியத்தை நினைத்துதான் நாங்கள் இராஜினாமா செய்தோம்.
எமக்கு அமைச்சுப் பதவிகள் பெரிதல்ல. ஜனாதிபதியும் பிரதமரும் மீண்டும் பதவிகளை ஏற்கும்படி கூறினார்கள். ஆனாலும் ஜனாதிபதியும், பிரதமரும் முழு நாடுமே நாங்கள் குற்றம் செய்யவில்லை என்பதை அறிவார்கள்” என கூறியுள்ளார்.
முடிந்தால் நிரூபித்து காட்டுங்கள்! அத்துரலியே ரத்ன தேரருக்கு ரிசாட் சவால் - Reviewed by Author on July 03, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.