மன்னார் பொதுவைத்தியசாலையின் சிறுவர்நல வைத்திய நிபுணர் S.N.றொஷாந்த்-இடமாற்றம் மக்கள் கவலை
மன்னார் பொதுவைத்தியசாலையின் சிறுவர்நல வைத்திய நிபுணர் S.N.றொஷாந்த் தனது 3வருடமும் 07 மாதப்பணியினை நிறைவு (2015-11-முதல் 06-07-2019) செய்துகொண்டு மட்டக்களப்பு கல்முனை வடக்கு பொதுவைத்திய சாலைக்கு மாற்றலாகிச்செல்கின்றார்.
முதல் 01வருட மன்னார் சேவையின் பின் அடுத்த வருடங்கள் தனது சுயவிருப்பத்துடன் மன்னார் பொதுவைத்திய சாலையிலே பணியாற்றினார். இவர் தனது பணிக்காலத்தில் மிகவும் சிறப்பான முறையில் நோயளர்களையும் சிறுவர்களையும் நல்லவிதத்தில் அவர்களின் தேவைகளை கேட்டறிந்து ஆலோசனை வழங்குவதோடு அவர்களின் நலனில் விசேட கவனம் செலுத்தும் மருத்துவராக பணியாற்றியுள்ளார்.
இவரின் சிறப்பு பணிகளாக….
பொதுவைத்திய சாலையின் கடமை நேரம் தவிர்ந்து தன்னை பார்க்கவிரும்புகின்ற அதே நேரம் தனது சேவை தேவைப்படுகின்ற சிறுவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு எந்நேரத்திலும் தன்னைப்பார்க்கவும் ஆலோசனைகளைப்பெற்றுக்கொள்ளவும் தனது தொலைபேசி இலக்கத்தினையும் வழங்கிள்ளார்.
தனியார் கிளினிக்கில் சேவையாற்றாமல் தானும் தனது துணைவியாரும் மருத்துவப்பணியிலே முழுமையாக ஈடுபட்டுவருகின்றனர்.
தனது மன்னார் வருகையின் ஆரம்பத்தில் மெதடிஸ் ஆலயத்தில் புதன்கிழமை இலவசமாக மருத்துவம் செய்துள்ளார்.பின் பணியின் தேவை அதிகமாக தனியொருவராக கடமையாற்ற வேண்யுள்ளதை உணர்ந்து அதாவது இரண்டு சிறுவர்நல வைத்திய நிபுணர்கள் செய்யவேண்டிய பணியை தானே செய்துள்ளார்.
இவரின் சாந்த குணமும் அமைதியான தொடர்பாடலும் குழந்தகள் சிறுவர்கள் மட்டுமல்லாது பெரியவர்களையும் கவர்ந்துள்ளதால் மக்கள் மனம்கவர்ந்த மருத்துவராக திகழ்ந்திருக்கின்றார்.
இவ்வைத்தியரின் இடமாற்றத்தால் இவரது துணைவியாரான மருத்துவரும் இடமாற்றம் பெற்று செல்கின்றனர் இதனால் சேவை நலன்மிக்க மருத்துவர்கள் பொதுவைத்தியசாலை விட்டுச்செல்வதை எண்ணி மக்கள் கவலையடைந்துள்ளனர்…
இவ்வளவு காலமும் சிறப்பான சேவையாற்றிய மருத்துவர்களுக்கு நியூமன்னார் இணைக்குழுமம் வாழ்த்துகின்றது.
"மகத்தான பணிகளில் மருத்துவப்பணி முதன்மையானது...."
மன்னார் பொதுவைத்தியசாலையின் சிறுவர்நல வைத்திய நிபுணர் S.N.றொஷாந்த்-இடமாற்றம் மக்கள் கவலை
Reviewed by Author
on
July 03, 2019
Rating:

No comments:
Post a Comment