அண்மைய செய்திகள்

recent
-

சைனஸ்பிரச்சனையால் பெரும் தொல்லையா....இதோ சில வீட்டு வைத்தியங்கள்..

குளிர்காலத்தில் நம்மில் பலரும் சந்திக்கும் பிரச்சினைகளுள் சைனஸ் பிரச்சினையும் ஒன்றாக கருதப்படுகின்றது.
பெரும்பாலானவர்கள் ஒவ்வாமையின் காரணமாகத்தான் சைனஸ் தொல்லைக்கு ஆளாகிறார்கள்.

இந்த சைனஸ் பிரச்சனைக்கான அறிகுறிகளாவன, காய்ச்சல், உடல்சோர்வு, இருமல், மூக்கடைப்பு, தலைபாரம், மூக்கில் நீர் வடிதல் போன்றவையாகும்.

அந்தவகையில் இதுபோன்ற பிரச்சினையிலிருந்து எளிதில் விடுபட கீழ் குறிப்பட்டுள்ள இயற்கை முறைகளை பின்பற்றினாலே போதும். தற்போது அவற்றை பார்ப்போம்.

சைனஸ் பிரச்சனைக்கு 15 மிலி. துளசி இலைச்சாறுடன் தேன் கலந்து உண்ணலாம். இதனை தொடந்து செய்து வர சைனஸ் பிரச்சனை குணமாகும்.
சைனஸ் பிரச்சனைகளுக்கு ஒரு கிராம் பேரரத்தைப் பொடியை, பாலில் கலந்து பருகலாம்.

ஆடாதொடை இலை, வேர் இரண்டையும் கைப் பிடியளவு எடுத்து நான்கு பங்கு தண்ணீர் சேர்த்து, அதை ஒரு பங்காக வற்றவைத்து, தேன் கலந்து அருந்தலாம்.
கசகசாப் பொடியில் அரை ஸ்பூன் தேன் கலந்து சாப்பிடலாம்.

சைனஸ் பிரச்சனைகளை தீர்க்க கைப்பிடி அளவு கண்டங்கத்திரிச் செடியில் நான்கு பங்கு தண்ணீர் சேர்த்து, அதை ஒரு பங்காக வற்ற வைத்து அருந்தலாம்.

பெருஞ்சீரகப் பொடி, மிளகுத் தூள், பனங்கற்கண்டு சம அளவு எடுத்து அதில் ஒரு ஸ்பூன் அளவு உண்ணலாம்.

தும்பை பூவை சைனஸ் பிரச்சனைகளுக்கு தீர்வாக பயன்படுத்தலாம். இந்த தும்பை பூவானது சாலை ஓரங்களிலே காணப்படும் ஒன்றாகும். ஒரு ஸ்பூன் தும்பைப் பூச் சாறுடன் கற்கண்டு சேர்த்து அருந்தலாம்.

சளி, சைனஸ் போன்ற பிரச்சனைகளுக்கு துதுவளையை விட சிறந்த தீர்வு எதுவும் இருக்க முடியாது என்று கூறலாம். அரை ஸ்பூன் தூதுவளைப் பொடியில் தேன் கலந்து உண்ணலாம்.

கற்பூரவள்ளி ஆனது சைனஸ் பிரச்சனைகளுக்கு தீர்வாக அமைகிறது. 15 மிலி. கற்பூர வள்ளிச் சாறைக் கற்கண்டு சேர்த்து அருந்தலாம்.

ஆதண்டைக் காயை வற்றலாகச் செய்து சாப்பிடலாம். ஊமத்தையும் சுக்கையும் சம அளவு எடுத்துப் பொடித்து, அதை அரை ஸ்பூன் தேனில் கலந்து உண்ணலாம்.

மணத்தக்காளி ஆனது நமக்கு எளிதாக கிடைக்க கூடிய ஒன்றாகும். 50 கிராம் மணத்தக்காளி வற்றலை, 200 மிலி வெந்நீரில் ஊறவைத்து வடித்து அருந்தலாம்.

திப்பிலி மற்றும் பனங்கற்கண்டு ஆகிய இரண்டுமே மிக சிறந்த மருத்துவ பொருள்களாகும். திப்பிலிப் பொடியுடன் பனங்கற்கண்டு சம அளவு சேர்த்து, அரைஸ்பூன் பாலில் கலந்து உண்ணலாம்.

வெற்றிலை நெஞ்சு சளி பிரச்சனைகளுக்கு மிக சிறந்த ஒரு தீர்வாக உள்ளது. வெற்றிலைச் சாறு 15 மிலி எடுத்து மிளகுத் தூள் கால் ஸ்பூன் அளவு சேர்த்து உண்ணலாம்.

சுக்கை களியாகச் செய்து நெற்றியில் பற்று போடலாம். மேலும் லவங்கத்தை நீர்விட்டு மைபோல் அரைத்து நெற்றியிலும், மூக்கின் மேலும் பற்று இடலாம்.

அகிற்கட்டைத் தைலத்தைத் தலையில் தேய்க்கலாம். கண்டுபாரங்கியைக் கடுக்காய், நெல்லிக்காய் தான்றிக்காய் சேர்த்து அரைத்துப் பற்று போடலாம்.

சுக்கு நமது வீட்டில் எப்போதும் இருக்கும் ஒரு பொருளாகும். இதனை பற்றாக போட்டால் தலைவலியில் இருந்து நிவாரணம் கிடைக்கும். நீர்க்கட்டு நீங்கும். சுக்கைத் தாய்ப்பாலில் அரைத்து, நெற்றியில் பற்றிட்டு அனல் படும்படி லேசாகக் காட்டலாம். இதனால் சைனஸ் பிரச்சனையில் இருந்து நிவாரணம் பெற முடியும்.

தேன், மிளகு, பூண்டு, முட்டை, கோழி போன்ற உணவுகளை தினசரி சேர்க்க வேண்டியது அவசியமாகும். இதனால் சைனஸ் பிரச்சனைகளில் இருந்து விடுதலை பெற முடியும்.

சைனஸ்பிரச்சனையால் பெரும் தொல்லையா....இதோ சில வீட்டு வைத்தியங்கள்.. Reviewed by Author on July 11, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.