கம்பீரமான காளை என பரிசு வாங்கிய காளை....
North Yorkshireஇல் நடைபெற்ற அந்த நிகழ்ச்சியில் கம்பீரமாக நடைபோட்ட அந்த காளைக்குத்தான் முதல் பரிசு வழங்கப்பட்டது.
ஆனால் பரிசு அறிவிக்கப்பட்ட சிறிது நேரத்தில் தன்னை நடத்தி வந்தவரின் கட்டுப்பாட்டை மீறிய அந்த காளை அங்குமிங்கும் துள்ளிக் குதித்து ஓட ஆரம்பித்தது.

அது இழுத்துச் சென்றதில் கீழே விழுந்த காளையின் உரிமையாளர் கீழே விழுந்ததில் அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது.
உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த நபருக்கு உயிருக்கு ஆபத்து எதுவும் இல்லை என்றும், பின்னர் அவர் மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்பட்டு மீண்டும் நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு திரும்பியதாகவும் தெரியவந்துள்ளது.
திடீரென அந்த காளை ஏன் அப்படி நடந்து கொண்டது என்பதற்கான காரணம் தெரியவில்லை.




கம்பீரமான காளை என பரிசு வாங்கிய காளை....
Reviewed by Author
on
July 11, 2019
Rating:
No comments:
Post a Comment