அண்மைய செய்திகள்

recent
-

முல்லைத்தீவில் வறண்டு போன குளம்! கால்நடைகள் எதிர்நோக்கியுள்ள அவலம் -


முல்லைத்தீவு மாவட்டத்தில் நிலவும் கடும் வறட்சி காரணமாக வன்னிவிளாங்குளம் நீர்வற்றி காணப்படுவதனால் கால்நடைகள் நீர்தேடி அலைவதுடன் குடிநீர் நெருக்கடி காணப்படுவதாகவும் பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் வவுனிக்குளம் நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கீழ் உள்ள பாரிய குளங்களில் ஒன்றான வன்னிவிளாங்குளம் தற்போது நிலவும் கடும் வறட்சி காரணமாக நீர் இன்றி காணப்படுகின்றது.
மேற்படி குளத்தின் கீழ் இவ்வாண்டு சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டபோதும் வறட்சி காரணமாக நாற்பது வீதமான செய்கைகள் பாதிக்கப்பட்டதாகவும் விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.

தற்போது குளத்தின் நீர் முழுமையாகவே வற்றியுள்ள நிலையில் இப்பிரதேசத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கால்நடைகள் குடிநீர் இன்றி அலைந்து திரிவதாகவும் குறிப்பிட்ட சில பண்ணையாளர்கள் தமது கால்நடைகளுக்கான குடிநீர் வசதிகளை வீடுகளில் ஏற்படுத்தினாலும் கடும் வறட்சி காரணமாக கிணறுகளில் நீர் வற்றுகின்றன.

தொடரும் வறட்சி நிலை காரணமாக தொழில் வாய்ப்பின்மை, குடிநீர்த்தேவை என்பன அதிகரித்து செல்வதாகவும் பாதிக்கப்பட்ட குளத்தின் கீழான விவசாயிகளும் பொதுமக்களும் தெரிவித்துள்ளனர்.
முல்லைத்தீவில் வறண்டு போன குளம்! கால்நடைகள் எதிர்நோக்கியுள்ள அவலம் - Reviewed by Author on September 05, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.