அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் கல்வி வலய நிர்வாகத்தின் கீழ் புத்தளத்தில் இயங்கி வருகின்ற 6 முஸ்லீம் பாடசாலைகளும் வடமேல் நிர்வாகத்தின் கீழ்

மன்னார் மாவட்டத்தின் அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் நீண்ட காலமாக பிரஸ்தாபிக்கப்பட்டு வந்த மன்னார் கல்வி வலயத்தின் நிர்வாகத்தின் கீழ் இயங்கி வந்த புத்தளம் மாவட்டத்தில் இயங்கி வரும் ஆறு பாடசாலைகளும் தற்பொழுது வடமேல் மாகாண ஆளுனரிடம் வட மாகாண ஆளுனர் கையளித்துள்ளார்.

  • புத்தளம் பகுதியில் இயங்கி வரும் மன்னார் கல்வி வலயத்தைச் சேர்ந்த றிஸ்வான் அரசினர் முஸ்லீம் கலவன் பாடசாலை
  • ஆப்தீன் அரசினர் முஸ்லீம் கலவன் பாடசாலை
  • அன்சரி அரசினர் முஸ்லீம் கலவன் பாடசாலை
  • ஹஸ்பன் அரசினர் முஸ்லீம் கலவன் பாடசாலை
  • அயூப் அரசினர் முஸ்லீம் கலவன் பாடசாலை
  • ரிஷாத் பதியுதீன் மகா வித்தியாலயம் ஆகிய ஆறு பாடசாலைகளையும் கடந்த வாரம் வட மாகாண ஆளுனர் கலாநிதி சுரேன் ராகவன் வடமேல் மாகாண ஆளுனர் பேசல ஐயரத்ன பண்டாரவிடம் சட்டபூர்வமாக கையளித்துள்ளார்.

இவ் பாடசாலைகளில் 167 ஆசிரியர்கள் கற்பித்தலில் ஈடுபடுவதுடன் 2386 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.

இவ் பாடசாலைகள் 1990 ஆம் ஆண்டிற்கு பிற்பட்ட காலத்தில் இடம்பெயர்ந்து வாழ்ந்த பிள்ளகைளுக்காக புத்தளப் பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட பாடசாலைகளாக இருந்தபொழுதும் இவ் பாடசாலைகள் மன்னார் கல்வி வலய நிர்வாகத்துக்கு உட்பட்டே இவ்வளவு காலமும் இயங்கி வந்தன.
ஆனால் இவ் பாடசாலைகளால் மன்னாரில் கல்வி பயின்று வந்த மாணவர்களின் பல்கலைகழக அனுமதி விகிதாசாரத்தில் அதிகம் பாதிப்புக்களை ஏற்படுத்தி வருவதாக வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனின் கவனத்துக்கு இப்பகுதி பெற்றோரால் கொண்டு வரப்பட்ட நாட்களிலிருந்து இவரின் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டன.

கடந்த காலங்களில் மன்னார் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டங்களிலும் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனால் அடிக்கடி இவ் பாசாலைகள் சம்பந்தமாக விமரிசிக்கப்பட்டு வந்ததுடன் வடமாகாண சபை கல்வி அமைச்சு முதல் மத்திய கல்வி அமைச்சு வரை இதற்கான தீர்வை வேண்டி செயல்பட்டு வந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இந்த சந்தர்ப்பத்திலேயே சாள்ஸ் நிர்மலநாதன்MP  வடமாகாண ஆளுநரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டதைத் தொடர்ந்து இவ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மன்னார் கல்வி வலய நிர்வாகத்தின் கீழ் புத்தளத்தில் இயங்கி வருகின்ற 6 முஸ்லீம் பாடசாலைகளும் வடமேல் நிர்வாகத்தின் கீழ் Reviewed by Author on October 18, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.