அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் தேசிய இந்துசமய அருள்நெறி விழா -படங்கள்


தேசிய இந்துசமய அறநெறிக்கல்வி விழிப்புணர்வு மாதத்தினை முன்னிட்டு இடம்பெற்ற அருள்நெறி விழா இந்து சமய கலாசார திணைக்களம் மற்றும் இந்துசமய விவகார அமைச்சினால் ஒழுங்கு செய்யப்பட்டு திருக்கேதீஸ்வரம் தியாகராஜா மண்டபத்தில் 2019 /09/14ஆம் திகதி வெகு விமர்சையாக நடைபெற்றது.
இதன்போது இந்து சமய பாடசாலைகள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் உன்னத பங்களிப்பு நல்குவோரை பாராட்டி, இந்து சமய அறநெறி கல்வி செயற்பாட்டிற்கு ஊக்கம் நல்கும் வகையில் முன்னெடுக்கப்பட்டது.

இந்து கலாச்சார அலுவல்கள் திணைக்களப் உதவி பணிப்பாளர் திருமதி ஹேமலோஜினி குமரன் அவர்களின் வரவேற்புரையும் இந்துசமய கலாச்சார அலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் திரு அ.உமாமகேஸ்வரன் அவர்களின் தலைமை உரையும் மன்னார் ஞானவைரவர் அறநெறி பாடசாலை மாணவி செல்வி கி.செ.திவிசாவின் கதாபிரசங்கம் மாவட்ட ரீதியிலான போட்டிகளில் வெற்றியீட்டிய அறநெறி பாடசாலை மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கியதோடு

இந்நிகழ்வில்........
  • இந்துசமய கலாச்சார அலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் திரு அ.உமாமகேஸ்வரன் அவர்கள் 
  • இந்து கலாச்சார அலுவல்கள் திணைக்களப் உதவி பணிப்பாளர் திருமதி ஹேமலோஜினி குமரன் அவர்கள்.
  • வன்னி மாவட்ட முன்னாள் அரசாங்க அதிபரும் இந்து கலாச்சார திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளருமான திரு தில்லை நடராஜா அவர்கள்.
  • திருக்கேதீச்சர திருப்பணிச்சபை இணை செயலாளர் திரு செ.சி.இராமகிருஸ்னன் அவர்கள்.
  • இந்து கலாச்சார அலுவல்கள் திணைக்களப் உதவி பணிப்பாளர் திரு கர்ஜின் அவர்கள் 
  • மன்னார் மாவட்ட இந்து ஆலயங்கள் ஒன்றியத்தின் தலைவர் வைத்திய கலாநிதி மு.கதிர்காமநாதன் அவர்கள்.
  • நலிவுற்றோர் நலன் காப்பு நிலைய பொறுப்பாளர் திரு சு.பிருந்தாவனநாதன் அவர்கள்.
  • திரு நடேசானந்தன் அவர்கள்.
  • மன்னார் சித்தி விநாயகர் ஆலய அறங்காவலர் திரு கிருபானந்தன் அவர்கள்.இணைந்து போட்டிகளில் வெற்றியீட்டிய அறநெறி பாடசாலை மாணவர்களுக்கும்  அறநெறி பாடசாலைகளின் வளர்ச்சிக்காக உன்னத பங்களிப்பு ஆசிரியர்கள் மற்றும் பெரியோர்களை பாராட்டி சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டனர் கலைநிகழ்வுகளும் இடம்பெற்றது.






மன்னாரில் தேசிய இந்துசமய அருள்நெறி விழா -படங்கள் Reviewed by Author on October 17, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.