அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மாவட்ட தேர்தல் தொகுதியில் 76 வாக்கெடுப்பு நிலையங்களில் 89403 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

வன்னி தேர்தல் தொகுதியான மன்னார் மாவட்டத்தில் இறுதியாக நடைபெற்ற
உள்ளுராட்சி தேர்தலில் வாக்களித்தவர்களைவிட தற்பொழுது நடைபெற இருக்கும்
வாக்காளர் தொகை 3309 ஆல் அதிகரித்துள்ளன. எதிர்வரும் ஐனாதிபதி
தேர்தலுக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி அடைந்துள்ளதாகவும் 76
வாக்குகெடுப்பு நிலையங்களில் 89403 வாக்காளர்கள் வாக்களிப்பதற்கான
ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட தேர்தல் தொகுதிக்கான உதவி ஆணையாளர் ஜெ.ஜெனிற்றன் இவ்வாறு தெரிவித்தார்.

எதிர்வரும் நடைபெற இருக்கும் ஐனாதிபதி தேர்தலில் வன்னி தேர்தல் தொகுதியான மன்னார் மாவட்டத்தில் 89403 வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை 76 வாக்கெடுப்பு நிலையங்களில் வாக்களிக்க இருக்கின்றனர்.

வாக்களிக்கப்பட்ட வாக்குகளை மன்னார் மாவட்ட செயலகத்தில் ஏற்பாடு
செய்யப்பட்டுள்ள எட்டு நிலையங்களில் வைத்து எண்ணும் பணிகள் இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

கடந்த 2017 ஆம் ஆண்டு மன்னார் மாவட்டத்தில் நடைபெற்ற உள்ளுராட்சி மன்ற தேர்தலில் 86094 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர்.

ஆனால் நடைபெற இருக்கும் ஐனாதிபதி தேர்தலில் மன்னார் மாவட்டத்தில் 89403 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருக்கின்றனர். இது இம்முறை 3309 வாக்காளர்களால் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இம்முறை வாக்களிப்போரில் 4009 வாக்காளர்கள் தபால் மூலம் வாக்களிக்க இருக்கின்றனர். தற்பொழுது வாக்குச் சீட்டுக்கள் எல்லாம் மன்னாரை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

தபால் மூலம் வாக்களிப்பவர்களுக்கான வாக்களிப்பு பொதிகள் 18 ந் திகதி
தபால் அலுவலகத்தில் ஒப்படைக்கப்படும். கடந்த காலங்களில் இவ் பொதிகளை மன்னார் தேர்தல் திணைக்களம் மன்னார் தபால் அலுவலகத்துக்கு கொண்டு சென்றே இவைகளை ஒப்படைத்து வந்தது.

ஆனால் இம்முறை இவ் பொதிகளை மன்னார் மாவட்ட செயலகத்தில் தேர்தல் திணைக்களத்தின் மேல்மாடியிலுள்ள ஜெயிக்கா மண்டபத்தில் விஷேடமாக ஏற்பாடு செய்யப்படடிருக்கும் தபால் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

அத்துடன் எதிர்வரும் 25 ந் திகதி முதல் வாக்காளர்கள் அட்டைகள் தபாலகங்கள் ஊடாக விநியோகிப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன

மேலும் தேர்தல் சம்பந்தமான முறைப்பாடுகள் செய்வதற்காக இம்முறை மன்னார் மாவட்டத்தில் விஷேட முறைப்பாடு நிலையம் மன்னார் மாவட்ட செயலகத்தில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாகவும் இது 24 மணித்தியாலமும் செயல்பாட்டில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இவற்றுடன் தொடர்பு கொள்ள வேண்டிய
  • தொலைபேசி இலக்கம் 023.2223713 
  • தொலை நகல் இலக்கம் 023 2223714 ஆகும் எனவும் மன்னார் மாவட்ட தேர்தல் தொகுதிக்கான உதவி ஆணையாளர்  ஜெ.ஜெனிற்றன் இவ்வாறு தெரிவித்தார்.

மன்னார் மாவட்ட தேர்தல் தொகுதியில் 76 வாக்கெடுப்பு நிலையங்களில் 89403 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். Reviewed by Author on October 17, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.