அண்மைய செய்திகள்

recent
-

திருக்கேதீச்சரத்தின் வளைவு அமைப்பது தொடர்பாக இதுவரை நடைபெற்ற பேச்சுக்களில் கத்தோலிக்க தலைமைகள் எந்த விட்டுக்கொடுப்புக்களையும் செய்யவில்லை நல்லிணக்க ரீதியில் செயற்படுமாறு மாவட்ட இந்து குருமார் பேரவை கோரிக்கை

திருக்கேதீச்சரத்தின் வளைவு அமைப்பதில் கத்தோலிக்க மற்றும் இந்து தரப்பினருக்கும் இடையில் நடைபொற்ற நல்லினக்கம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் பற்றி ஊடகத்தினருக்கு தெரிவிக்கும் ஊடக சந்திப்பு இன்று(23)மாலை மூன்று மணியளவில் மன்னார் ஆகாஷ் விடுதியில் நடைபெற்றது

 இதன் போது கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மன்னார் மாவட்ட இந்து குருமார் பேரவை தலைவர் குறித்த கோரிக்கையை  முன்வைத்தார்


நீண்டகால பிரச்சனையாக நடைபெற்று கொண்டிருக்கின்ற திருக்கேதீச்சர ஆலயத்தின் அலங்கார வளைவு உடைக்கப்பட்ட சம்பவம் இதனைத் தொடர்ந்து இந்த விடயம் தொடர்பாக உரிய தரப்பிடம் பேசி ஒரு நல்லினக்கத்திற்கு வரவேண்டும் என்று அழைப்பு விடுத்திருந்தார்கள்

அந்த வகையில்  மன்னார் மாவட்டத்தின் இந்து மகாசபை இந்து குருமார் பேரவை இணைந்து  மன்னார் மாவட்டச் செயலர் திரு மோகன்றாஸ் அவர்களின் தலைமையில் மன்னார் பொலிஸ்நிலையத்தின் பொறுப்பதிகாரி அவர்களின் வேண்டு கோளுக்கு அமைவாக மன்னார் மாவட்டச் செயலகத்தில்

எமது இரண்டு தரப்பிற்குமான பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகி இடம் பெற்ற  இந்த ஆரம்ப பேச்சுவார்த்தையில் இந்து மக்கள் சார்பாக  சைவ பிரதிநிதிகளும் ஆயர் இல்லத்திலிருந்து கத்தோலிக்க பிரதிநிதிகளும் இணைந்து கிட்டத்தட்ட ஐந்து தடவைகள் பேச்சுவார்தை நடைபெற்றது


குறித்த பேச்சு வார்த்தையில் எந்த இடத்தில் வளைவு அமைப்பது தொடர்பில்  நடைமுறைச் சிக்கல்கள் இருந்தது  இருந்தபோதிலும்  திருக்கேதீச்சரத்தின் வரலாறுகளையும் புனிதத்தன்மையையும் உணர்ந்து இதற்கு கட்டாயமாக திருக்கேதீச்சரத்தின் ஆலய வீதியில்  பிரதான வீதியில் இருந்து ஐம்பது அடி அளவிலே வளைவு அமைப்பதற்கு எமக்கு அனுமதி கிடைத்திருந்தது

மன்னார் பிரதேச சபையின் தவிசாளரின் வேண்டுகோளுக்கு அமைவாக அதிலிருந்து பின்னால் சென்று என்பத்தைந்து அடியில் வளைவை அமைக்கின்றோம் என்று அவர்களுடன் ஒரு சமரச பேச்சில் ஈடுபட்டு வந்தோம் அப்போது அதிலிருந்து இன்னும் பின்னால் சென்று அந்த வளைவினை அமைக்க வேண்டும் இல்லை என்றால் கத்தோலிக்க மக்களுக்கும் சைவ மக்களுக்கும் தேவையற்ற பிரச்சனை காலம் காலமாக உருவாகலாம் என்னும் கருத்து தெரிவிக்கப்பட்டமைக்கு ஏதுவாக மீண்டும் நாங்கள்  மீள் பரிசீலனை செய்து இருபது அடி பின் சென்று நூறு அடியில் அந்த வளைவை அமைக்கலாம் என்று எமது அபிப்பிராயத்தை தெரிவித்திருந்தோம்


 அதற்கு தாங்கள் பங்குத்தந்தையர்களுடனும் உரிய தரப்பினருடனும் கதைத்துவிட்டு கருத்து தெரிவிப்பதாக கூறினார்கள் மீண்டும் ஒரு நீண்ட கால அவகசத்திற்கு பின் அவர்கள் கூடி வந்து வளைவு அமைக்கப்பட வேண்டிய இடத்தில் பார்த்த பொழுது முன்பு புதை குழியிருந்த இடத்திற்கு அருகாமையில் வளைவு அமைப்பது பொருத்தமாக இருக்கும் என்று தெரிவித்தார்கள்

அலங்கார வளைவு என்பது அந்த சந்தியில் இருந்து ஐம்பதடி என்பத்தைந்தடி நூறு அடி நூற்றி இருபது அடி என்று நாங்கள் விட்டுக் கொடுத்த போதிலும் கத்தோலிக்க தலைமைகளிடம் இருந்து எமக்கு சரியான விட்டுக்கொடுப்புகள் வரவில்லை அதுமட்டுமல்லாது அவ்வளவு விட்டுக்கொடுப்புக்கள் செய்தும் பேச்சுவார்த்தைகள் முடிவுறாத நிலையிலும் இந் விடயம் தொடர்பாக மேல் நீதி மன்டறத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்கள்

 ஒரு சமரச பேச்சுக்கள் நடைaபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில்  அவர்கள் ஒரு வழக்கு தாக்கல் செய்வதில் இருந்து அவர்கள் நல்லினக்கத்தை எவ்வாறு விரும்புகிறார்கள் என்று அறிந்து கொள்ளலாம் அதுமட்டுமல்லாது எமக்கு வளைவு கட்டுவதற்கு அனுமதி தந்த பிரதேச சபை தவிசாளரிடம் சென்று  கொடுத்த அனுமதியை ரத்து செய்யுமாறும் கோரியுள்ளார்கள் எமக்கான வளைவு கட்டும் பணி நிறுத்தப்பட்டுள்ள நிலையில் கத்தோலிக்க மக்கள் தோட்ட வெளி சந்தியில் புதிதாக ஒரு  வளைவு ஒன்றினை அமைக்கும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளார்கள்

இது தொடர்பாக மன்னார் மாவட்ட குரு முதல்வரிடம் தொடர்பு கொண்ட பொழுது இது தொடர்பாக அவதானிப்பதாக கூறியிருந்தார் ஆனால் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் மன்னார் பிரதேச சபையில் நாங்கள் முறைப்பாடு செய்திருந்தோம் தோட்டவெளி சந்தியில் கத்தோலிக்க மக்கள் வளைவு கட்டுவதில் எமக்கு எந்த விதமான ஆட்சேபனையும் இல்லை அவர்களுடைய இடத்தில் வளைவு அமைக்கத்தான் வேண்டும் ஆனால் எமக்கான வளைவு கட்டுவதை நிறுத்தி விட்டு  அவர்களுக்கு புதிதாக ஒரு வளைவை கட்டுவதற்கு ஆரம்பிக்கும் பொழுது சைவ மக்களாகிய எமது மனதுக்கு வேதனை அளிக்கிறது எனவே ஒரு சமரசத்ஆதாடு பேச வேண்டும் என்று நல்லினக்கத்தோடு சென்ற எங்களுக்கு அவர்கள் பக்கத்தில் இருந்து சாதகமான பதில் எதுவும் வரவில்லை

அதனால்தான் இவ்வாறான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்  ஆனால் உடைக்கப்பட்ட வளைவினை  அமைக்க வேண்டும் என்பதில் மன்னார் சைவ மக்கள் உறுதியாக உள்ளார்கள் என்று மன்னார் இந்து குருமார் பேரவையின் தலைவர் மஹா தர்மகுமார குருக்கள் தெரிவித்தார்.
இந்த ஊடக சந்திப்பில் திருக்கேதீச்சர திருப்பணிச்சபை செயலாளர் எஸ்.இராமகிருஷ்ணன் திருக்கேதீச்சரத்தின் தலைமைக்குரு கருணானந்தக் குருக்கள் போன்றோர் பங்குபற்றியிருந்தார்கள்.

திருக்கேதீச்சரத்தின் வளைவு அமைப்பது தொடர்பாக இதுவரை நடைபெற்ற பேச்சுக்களில் கத்தோலிக்க தலைமைகள் எந்த விட்டுக்கொடுப்புக்களையும் செய்யவில்லை நல்லிணக்க ரீதியில் செயற்படுமாறு மாவட்ட இந்து குருமார் பேரவை கோரிக்கை Reviewed by Author on October 23, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.