Top Ad unit 728 × 90

அண்மைய செய்திகள்

recent
-

மன்னார், மாதோட்டம் நாட்டுக்கூத்துக்களின் ராகங்களும் அழியாவண்ணம் பாதுகாக்கப்படும். வடக்கு மாகாண பிரதம செயலாளர் A.பத்திநாதன்

மன்னார், மாதோட்டம் நாட்டுக்கூத்துக்களின் ராகங்களும் அழியாவண்ணம்
பாதுகாக்கப்படும்.வடக்கு மாகாண பிரதம செயலாளர் ஏ.பத்திநாதன்

மன்னார், மாதோட்டம் நாட்டுக்கூத்துக்களின் ராகங்களை இசைத்தட்டின் ஊடாக வெளிக்கொணரும்போது இவைகளும் அழிந்து போகாத தன்மையாக பாதுகாக்கப்படும் என வடக்கு மாகாண பிரதம செயலாளர் ஏ.பத்திநாதன் இவ்வாறு தெரிவித்தார்.

வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர்விவகார அமைச்சின் பண்பாடலுவல்கள் திணைக்கள நிதி அனுசரணையில் நூல் வடிவம் பெற்ற மன்னார் பெரிய கட்டைக்காடு புலவர் க.மரிசாற்பிள்ளையால் ஆக்கப்பட்ட வடபாங்கு தென்பாங்கு இணைந்த கூத்தான 'புனித சூசையப்பர் வாசகப்பா' மற்றும் பேசாலை புனித வெற்றி நாயகியின் பங்குமக்களால் அளிக்கை செய்யப்பட்ட 'அர்ச்சிய சிஷ;ட மூவிராசாக்கள் வாசகப்பா' ஆகிய இரண்டு
நூல்களும் வெளியீடு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட வடக்கு மாகாண பிரதம செயலாளர் ஏ.பத்திநாதன் இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்

எனக்கு இருக்கும் அவா என்னவென்றால் மக்களோடு அவர்களின் வாழ்வியலோடு இரண்டர கலந்துள்ள கலை பொக்கிஷம் அதாவது நாட்டுக்கூத்து பாதுகாக்கப்பட வேண்டும்.

முன்னைய கலைஞர்கள் உருவாக்கிய எத்தனையோ கலைபொக்கிஷங்கள் அழிந்துவிட்டன. யுத்த சூழ்நிலையில் முள்ளிவாய்க்காலில் எத்தனையோ கையேடுகளை வைத்திருந்தவர்கள் விட்டுவிட்டு வந்து விட்டார்கள்.

தற்பொழுது கையில் இருக்கும் கையேடுகளை நூல் வடிவில் ஏற்படுத்த வேண்டும் என்பது எனது நீண்டகால அவா.

நான் 1994, 1995 ஆம் ஆண்டு யுத்தக்காலத்தில் புலிகள் கட்டுப்பாட்டு
பகுதியில் அரச நிர்வாகியாக இருந்து செயலாற்றியபோது அந்த நேரத்திலும்
இவ்வாறான இரு நூல்களை வெளியீடு செயங்யக்கூடியதாக இருந்தது.

அந்த நெருக்கடியான காலத்திலும் நாங்கள் நாட்டுக்கூத்துப் போட்டிகளை
நடாத்தியுள்ளோம். பின் காலப்போக்கில் நிலமை மிக மோசமாக போனமையால் இதில் தொடர்ந்து ஈடுபட முடியாது போய்யுள்ளது.

2015 ஆம் ஆண்டுக்கு பிறகு நான் இவ் பதவியை பொறுப்பேற்றபின் எம்மிடம் கலை பண்பாட்டலுவல்கள் திணைக்களம் இருக்கின்றது. இது எனக்கு மிக வசதியாக இருந்துள்ளது.

இவ்வளவு காலமும் கையெழுத்து ஏடாக இருக்கும் நாட்டுக்கூத்துக்களை நூலாகவெளியிட வேண்டும் என்று  2016 ஆம் அண்டு இந்த முயற்சி ஆரம்பிக்கப்பட்டு இந்த இரு புத்தங்களுடன் ஏழு புத்தகங்கள் வெளியீடு செய்யப்பட்டுள்ளன.

இது இத்துடன் நின்றுவிடாது தொடரும். அடுத்த ஆண்டு மூன்று புத்தகங்கள்
வெளியீடு செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

எம் தமிழ் புலவர்களின் ஒட்டுமொத்த வரலாறு, செபஸ்தியார் வாசாப்பு ஆகிய
புத்தகங்களுடன் மூன்று நூல்கள் நிச்சயம் வெளியிடப்படும். இத்துடன் இன்னொரு முயற்சியும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

அதாவது மன்னார், மாதோட்டம் கூத்து ராகங்களை இசைத்தட்டின் மூலம் வெளியீடுசெய்வதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இதற்கான பொறுப்புக்களை அருட்பணி அன்புராஐ; அடிகளார் (அமதி) ஏற்றுள்ளார்.இது எதிர்வரும் ஐனவரி மாதம் வெளியிடுவதற்கான உத்தேசமாக இருக்கின்றது என்றார்.

இவ்வாறான நூல்களை வெளியீடு செய்வதற்கான நடவக்கைகள் மேற்கொள்ளும்போது ஒவ்வொருவரும் ஒத்துழைப்பு வழங்கி செயல்பட வேண்டும் என வேண்டிக் கொள்ளுகின்றேன் என்றார்.

மன்னார், மாதோட்டம் நாட்டுக்கூத்துக்களின் ராகங்களும் அழியாவண்ணம் பாதுகாக்கப்படும். வடக்கு மாகாண பிரதம செயலாளர் A.பத்திநாதன் Reviewed by Author on November 08, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.