கனடாவில் வீடொன்றுக்குள் நடந்த மர்மம் - சடலங்களாக மீட்கப்பட்ட சிறுவர்கள் -
ஒன்ராரியோ - பிராம்ப்டன் பகுதியில் உள்ள வீட்டில் 9 மற்றும் 12 வயதுடைய இரண்டு சிறுவர்களின் சடலங்களே மீட்கப்பட்டுள்ளன.
பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய ஹைபர்டன் கிரசெண்டில்பகுதியிலுள்ள குடியிருப்பு தொகுதி சுற்றி வளைக்கப்பட்டது.
இதன்போது இரண்டு சிறுவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டதாக பீல் பிராந்திய பொலிஸ் அதிகாரி Heather Cannon தெரிவித்துள்ளார்.
சிறுவர்கள் உயிரிழந்த விதம் குறித்து கருத்து வெளியிட பொலிஸார் மறுத்துள்ளனர். எனினும் வீட்டுக்குள் நடந்த மர்மம் தொடர்பில் தீவிர விசாரணைகள் மேற்கொண்டு வருவதாக குறிப்பிட்டுள்ளனர்.
கனடாவில் வீடொன்றுக்குள் நடந்த மர்மம் - சடலங்களாக மீட்கப்பட்ட சிறுவர்கள் -
Reviewed by Author
on
November 08, 2019
Rating:

No comments:
Post a Comment