அண்மைய செய்திகள்

recent
-

உலகக்கோப்பை டி20 தொடருக்கான அட்டவணை வெளியீடு! முதல் போட்டியிலேயே களம் காணும் இலங்கை அணி -


அவுஸ்திரேலியாவில் 2020ஆம் ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பை தொடருக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
இந்த தொடருக்கான அட்டவணையை ஐசிசி வெளியிட்டுள்ளது. அதன்படி 2020ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 18ஆம் திகதி தொடங்கி, நவம்பர் 15ஆம் திகதி வரை இந்த தொடர் நடைபெற உள்ளது.

தரவரிசையில் முதல் 8 இடங்களை பெற்ற அணிகள் உலகக்கோப்பைக்கு நேரடியாக தகுதி பெற்றன. 9 மற்றும் 10வது இடத்தில் இருந்த வங்கதேசம் மற்றும் இலங்கை அணிகளை சேர்த்து தகுதி சுற்று மூலம் தேர்வான 6 அணிகள் முதல் சுற்றில் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இரண்டு பிரிவுகளாக நடைபெறும் முதல் சுற்று போட்டியில் ஒவ்வொரு பிரிவில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெறும்.





இதில் இலங்கை அணி அக்டோபர் 18ஆம் திகதி தொடங்கும் தனது முதல் ஆட்டத்தில் அயர்லாந்தை எதிர்கொள்கிறது.
இந்திய அணி, தனது முதல் ஆட்டத்தில் தென் ஆப்ரிக்கா அணியை 2020ஆம் ஆண்டு அக்டோபர் 24ஆம் தேதி எதிர்கொள்கிறது.
உலகக்கோப்பை தொடரின் முதல் அரையிறுதி போட்டி அடுத்தாண்டு நவம்பர் 11ஆம் திகதியும் இரண்டாவது அரையுறுதி போட்டி 12ஆம் திகதியும் நடைபெறுகிறது.
தொடரின் இறுதிப்போட்டி 2020ஆம் ஆண்டு நவம்பர் 15ஆம் திகதி மெல்போர்னில் நடைபெறவுள்ளது.

உலகக்கோப்பை டி20 தொடருக்கான அட்டவணை வெளியீடு! முதல் போட்டியிலேயே களம் காணும் இலங்கை அணி - Reviewed by Author on November 06, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.