அண்மைய செய்திகள்

recent
-

அக்கரைப்பற்று நோக்கி மதுபோதையில் பஸ் செலுத்திய சாரதி...

யாழ்ப்பாணத்திலிருந்து அக்கரைப்பற்று நோக்கி சென்ற இலங்கை போக்குவரத்து சபையின் பஸ்ஸின் சாரதி மதுபோதையில் பஸ்ஸை செலுத்தி சென்றநிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்றிரவு 7.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன்மூலம் பயணிகள் பலரின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது.


அத்துடன் குறித்த பஸ்ஸிலிருந்து பயணிகள் இறக்கப்பட்டு இலங்கை போக்குவரத்து சபை சாலையிலிருந்து வரவழைக்கப்பட்ட வேறு பஸ்ஸில் செல்ல அனுமதிக்கப்பட்டார்கள்
இன்று இரவு 7.30 மணிக்கு யாழ்ப்பாணத்திலிருந்து புறப்பட்ட அக்கரைப்பற்றுக்கான பஸ்  யாழ்ப்பாணம் நாவற்குழி வரவேற்பு வளைவு பகுதியில் பொலிஸார் மற்றும் ராணுவத்தினர்,  STFயினரால் சோதனையிட்டபோது பஸ்ஸின் சாரதி மதுபோதையில் காணப்பட்டதோடு அவரது ஆசனத்துக்கு அருகாமையில் பியர் மற்றும் மதுபான போத்தலும் காணப்பட்டன .
இதனையடுத்து உடனடியாக சாரதியின் சாரதி அனுமதிப்பத்திரத்தை பொலிசார் கைப்பற்றியதோடு பஸ்சில் பயணம் செய்த அனைத்து பயணிகளும் இறக்கப்பட்டு வேறு ஒரு பஸ்ஸில் அனுப்பப்பட்டனர். இதன் மூலம் பயணிகளின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையில் யாழ் 512வது பிரிகேட் ராணுவத்தினர், பொலிஸார் மற்றும் விசேட STFயினர் ஈடுபட்டனர்.
-ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ்-அக்கரைப்பற்று நோக்கி மதுபோதையில் பஸ் செலுத்திய சாரதி... Reviewed by Author on January 31, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.