தலைமன்னாரில் பனை மரத் தோப்பில் தீ விபத்து-500 க்கும் மேற்பட்ட பனை மரங்கள் தீயினால் சேதம்.
தலை மன்னார் பொலிஸ் பிரிவில் உள்ள கட்டுக்காரன் குடியிருப்பு கிராம அலுவலர் பிரிவில் உள்ள பருத்திப்பண்ணை கிராமத்திற்கு அருகில் அமைந்துள்ள தனி நபருக்கு சொந்தமான பனை மரத் தோப்பில் இன்று செவ்வாய்க்கிழமை (31) காலை தீ விபத்து ஏற்பட்டது.
இந்தத் தீ விபத்தில் சுமார் 500 க்கும் மேற்பட்ட பனை மரங்கள் சேதத்திற்கு உள்ளாகி உள்ளன.
எனினும் குறித்த தீ விபத்தில் உயிர் சேதமோ, வீடுகளுக்கோ அல்லது சொத்துக்களுக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை.
தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர தலை மன்னார் பொலிஸ் நிலைய போலீசார் செல்வேரி ராணுவ முகாமில் உள்ள இராணுவத்தினர், தலைமன்னார் கடற்படை , மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உத்தியோகத்தர்கள் இணைந்து தீயணைப்புத் துறை அதிகாரிகளுடன் கிராம மக்கள் இணைந்து தீயை கட்டுப்படுத்தினர்.
குறித்த தீ இன்று செவ்வாய்க்கிழமை (31) மாலை 4 மணியளவில் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. பனை மரங்களுக்கு பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Reviewed by Vijithan
on
April 01, 2026
Rating:

%20(1).jpeg)
.jpeg)

.jpeg)


.jpeg)
.jpeg)


No comments:
Post a Comment