பேசாலை முருகன் கோவிலடி இந்து முன்னணி கழகம் மீண்டும் மீண்டும் மீண்டும் ஒரு மாபெரும் வெற்றியை தன் வசமாக்கியது
2026 இல் இது இரண்டாவது கிண்ணம் மன்னார் மாவட்டத்தில் நடைபெற்ற இரண்டு போட்டித்தொடர்களையும் இந்து முன்னணி கழகம் தனதாக்கிக்கொண்டுள்ள்து.
மன்னார் மாவட்ட துடுப்பாட்ட சங்கத்தினால் நடத்தப்பட்ட Mannar District Cricket Association division 3
50 ஓவர் சுற்றுப்போட்டியில் நடைபெற்ற அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தையும் பெற்றுறுள்ள்து இந்து முன்னணி கழகம் 01.04.2026 அன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்து முன்னணி கழகம்
St Anne’s அணியை எதிர்த்து ஆடியது நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சென் ஆனஸ் விளையாட்டுக் கழகம் முதலில் துடுப்பெடுத்தாடியது ஆடிய st Anne’s 109 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது
பதிலுக்கு துடுப்பாடிய எமது இந்து முன்னணி கழகம் 14 ஓவர்களில் 4 விக்கட்டுக்கள் மாத்திரம் இழந்து 113 ஓட்டங்களை பெற்று இலகுவாக வெற்றியீட்டியது.
இதில் இந்து முன்னணி அணி வீரர் அஜந்தன் Ajanthan Ajaa Ajaa பந்துவீச்சில் 5 விக்கட்டுக்களையும்
துசி சர்மா Thusi Sharma 3விக்கட்டுக்களையும்
குகன் Kugan Keerthi 2 விக்கட்டுக்களையும் கைப்பற்றினர்
துடுப்பாட்டத்தில் துசி Thusi Sharma 48 ஓட்டங்களையும் லீனஷ் Leenus Lee22 ஓட்டங்களையும் சுகிர் Błácķ Lìkęŕ 20 ஓட்டங்களையும் பெற்று வெற்றிக்கு வித்திட்டனர்.
இப்போட்டித்தொடரின். இறுதிப் போட்டியில் ஆட்ட நாயகனாக துசி சர்மா தெரிவு செய்யப்பட்டார்
தொடரின் அதிகூடிய ஓட்டங்களை பெற்ற வீரராக இரண்டு சதங்கள் 💯 அடங்கலாக 270 ஓட்டங்களை எடுத்து சுகிர் சர்மா @Błácķ Lìkęŕ. leading run scorer விருதினை பெற்றார்
அத்துடன் அதிக விக்கட்டுக்கள் வீழ்த்திய வீரராக 14 விக்கட்டுக்கள் வீழ்த்திய அஜந்தன் leading wicket taker விருதினை பெற்றார் இப்போட்டித்தொடரில் எமது வீரர்கள் அனைவரும் மிகவும் சிறப்பாக செயல்பட்டனர்
Reviewed by Vijithan
on
April 02, 2026
Rating:


No comments:
Post a Comment