அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு தனியார் பேரூந்து சேவைகள் ஆரம்பம்-Photos

மன்னாரில் இருந்து வெளி மாவட்டங்களுக்கான தனியார் போக்குவரத்துச் சேவைகள் இன்று வியாழக்கிழமை காலை முதல் சுகாதார நடைமுறைகளுக்கு அமைவாக ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத் தலைவர் ரி. ரமேஸ் தெரிவித்தார்.

தனியார் போக்குவரத்து சங்கத் தலைவர் கெமுனு விஜய ரெட்ன அவர்களால் மாவட்ட தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கப் பிரதிநிகளுக்கு தெரியப்படுத்தியமைக்கு அமைவாக இன்று வியாழக்கிழமை முதல் தனியார் பேரூந்துகள் வெளி மாவட்டங்களுக்கு சேவையை ஆரம்பித்துள்ளதாக தெரிவித்தார்.

வடக்கு மாகாணத்திற்குற்பட்ட வவுனியா, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, ஆகிய மாவட்டங்களுக்கு தற்போது சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் வடக்கில் உள்ள குறித்த மாவட்டங்களில் இருந்தும் பேரூந்துகள் மன்னாரிற்கு வருகை தர உள்ளது.

ஆனால் அரசாங்கம் அறிவித்துள்ள சுகாதார நடை முறைகளை கட்டாயம் பின் பற்றுவதுடன் பயணிகள்   முகக்கவசங்கள் அணிந்து வர வேண்டும் என்று கோரிக்கை முன் வைக்கப்பட்டது.

மன்னார் நகர முதல்வர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சனிடம் முன் வைத்த கோரிக்கைகளுக்கு அமைவாக மன்னார் நகர சபை பணியாளர்களின் உதவியுடன் சேவையில் ஈடுபடும் தனியார் பேரூந்துகள் கிருமி தொற்று நீக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு, அதன் பின்னர் சேவைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.என அவர் மேலும் தெரிவித்தார்.மன்னாரில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு தனியார் பேரூந்து சேவைகள் ஆரம்பம்-Photos Reviewed by Admin on May 21, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.