அண்மைய செய்திகள்

recent
-

முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சியில் 22,260 வெடிபொருட்கள் அகற்றல்....

முல்லைத்தீவு  ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள அம்பகாமம் மற்றும் தச்சடம்பன் பகுதியிலும், கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள முகமாலை மற்றும் ஆனையிறவிலும் பதினொரு இலட்சத்து ஆயிரத்து தொளாயிரத்து ஐம்பத்து நான்கு சதுர மீற்றர் பரப்பளவில்  இருந்து 22 ஆயிரத்து 260 அபாயகரமான வெடிபொருட்களை அகற்றியுள்ளதாக ஸார்ப் நிறுவனத்தின் நடவடிக்கை முகாமையாளர் ஓய்வுபெற்ற கப்டன் பிரபாத் நாரம்பனவ தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்..........

இலங்கையின் வடபகுதியில் மனிதாபிமான கண்ணிவெடியகற்றலில் ஜப்பான் நாட்டு நிதியுதவியுடன் ஈடுபடும் ஸார்ப் மனிதாபிமானக் கண்ணிவெடியகற்றும் அரச சார்பற்ற நிறுவனமானது 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தொடக்கம் 2020 ஜீன் மாதம்; 08 ஆம் திகதி; வரையான காலப்பகுதியில் முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள அம்பகாமம் மற்றும் தச்சடம்பன் பகுதியிலும் கிளிநொச்சி மாவட்டத்தில் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள முகமாலை மற்றும் ஆனையிறவிலும் வெடிபொருட்களை அகற்றியுள்ளது.

இதன்படி பதினொரு இலட்சத்து ஆயிரத்து தொளாயிரத்து ஐம்பத்து நான்கு சதுரமீற்றர் பரப்பளவில் (1,101,954) இருந்து இருபத்திரண்டாயிரத்து இருநூற்று அறுபது அபாயகரமான வெடிபொருட்களை அகற்றியுள்ளது. தொடர்ந்து இந் நிறுவனம் கண்ணிவெடியகற்றும் பணிகளை முகமாலை மற்றும் ஆனையிறவு பகுதியில் துரித கதியில் முன்னெடுத்து வருகின்றது என்றார்.

(ஸார்ப் நிறுவனம் தகவல்)முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சியில் 22,260 வெடிபொருட்கள் அகற்றல்.... Reviewed by Author on June 12, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.