குளவிக்கூட்டால் பாதுகாப்பற்ற நிலையில் 20 ற்கும் அதிகமான குழந்தைகள்.......
மஸ்கெலியா சாமிமலை டிசைட் கிலனுகி தோட்டத்தில் சிறுவர் பாராமரிப்பு நிலைய கூரையில் பாரிய குளவிக்கூடு ஒன்று உள்ளமையினால் மக்கள் பெரும் அச்சத்துடன் இருக்கின்றனர்.
இதனால் சிறுவர்கள், தாய்மார்கள் பெரும் அசெளகரியங்களை எதிர் நோக்கி வருகின்றனர்.
குறித்த சிறுவர் நிலையத்தில் 20ற்கும் மேற்பட்ட குழந்தைகளை நாளாந்தம்
அங்கு விட்டுச்செல்வதாகவும் அங்குள்ள குளவிக்கூடு நாளுக்கு நாள்
பெருக்கின்றமையினால் தாம் அச்சத்தில் வாழ்ந்து வருவதாக பெற்றோர்கள்
தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பில் நாம் மஸ்கெலியா பொலிஸாருக்கும் அறிவித்துள்ளோம். இதேவேளை தோட்ட நிர்வாகத்திற்கு அறிவிக்கப்பட்டு தோட்ட நிர்வாகம் ஊடாக வனவிலங்கு அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் இது வரையிலும் குறித்த சிறுவர் நிலையத்தில் உள்ள குளவிக் கூட்டினை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
கடந்தவாரம் குளவியின் தாக்குதலுக்கு உள்ளாகி தேயிலை கொழுந்து பறித்த இரண்டு பெண் தொழிலாளர்கள் பலியான சம்பவங்களும் இடம்பெற்றுள்ளது.
எனவே இந்த பாரிய குளவிக்கூட்டினை அகற்றி குழந்தைகளின் பாதுகாப்பினை
உறுதிப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கப்பட
வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

No comments:
Post a Comment