அண்மைய செய்திகள்

recent
-

மடு மாந்தை உதைபந்தாட்ட லீக்கின் நிர்வாக செயற்பாடுகள் குறித்து அதிருப்தி

மடு மாந்தை உதைபந்தாட்ட சம்மேளனத்திற்கு ற்பட்ட அனைத்து கழகங்களையும் உள்ளடக்கி அனைத்துக் கழகங்களுக்கும் உரிய வாக்குரிமை வழங்கி இலங்கை உதைபந்தாட்ட சம்மேளன பிரதி நிதி முன்னிலையில் சரியான ஒரு நிர்வாக தெரிவை நடத்த வேண்டும் என மடு மாந்தை உதைபந்தாட்ட லீக்கின் புதிய நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். மடு மாந்தை உதைபந்தாட்ட லீக்கின் புதிய தலைவர் எம்.டி.அருண்ராஜ்,செயலாளர் யே. ஒகஸ்ரின்,பொருளாளர் க. மகேந்திரன் ஆகியோர் இணைந்து இன்றைய தினம் (20) திங்கட்கிழமை காலை மன்னாரில் ஊடக சந்திப்பை மேற்கொண்டனர். இதன்போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.

 -அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,,, உண்மையில் விளையாட்டு அமைப்புகள் விளையாட்டு வீரர்களின் திறனை வளர்த்துக் கொள்வதற்கான களத்தை அமைத்துக் கொடுப்பது,அவர்களின் திறமைகளை வெளி உலகிற்கு கொண்டு வருவதற்கான செயல்பாட்டை மேற்கொள்வதற்கான குழுவாகவே காணப்பட வேண்டும். ஆனால் தன்னிச்சையான செயல்பாடுகள்,தான் சார்ந்த செயல் பாடுகளை மேற்கொண்டு,விளையாட்டு வீரர்களின் மன நிலையை பாதிப்படையச் செய்கின்ற செயல்பாடாக தற்போது மடு மாந்தை லீக்கில் இடம்பெற்று வருவதாக எண்ணத்தோன்றுகின்றது. மடு மாந்தை லீக்கின் முந்தைய தலைவர் தன்னிச்சையாக தான் சார்ந்த ஒரு சில குறிப்பாக அவரின் ஊரில் உள்ள இரண்டு கழகமும்,அருகில் உள்ள கத்தாளம் பிட்டி கிராமத்தில் இருந்து ஒரு கழகம் உள்ளடங்களாக 3 கழகங்களை மாத்திரம் வைத்துக் கொண்டு ஏனைய 14 கழகங்களில் உள்ள விளையாட்டு வீரர்களின் வாழ்க்கை யை கேள்விக் குறியாக்கிக் கொண்டு இருக்கின்றனர். 

 மடு மாந்தை உதைபந்தாட்ட சம்மேளனத்திற்கு ற்பட்ட அனைத்து கழகங்களையும் உள்ளடக்கிய அனைத்துக் கழகங்களுக்கும் உரிய வாக்குரிமையை வழங்கி இலங்கை உதைபந்தாட்ட சம்மேளன பிரதிநிதி முன்னிலையில் எங்களுக்கான சரியான ஒரு நிர்வாக தெரிவை நடத்த வேண்டும். அதற்கான ஒழுங்கை இலங்கை உதைபந்தாட்ட சம்மேளன நிர்வாகம் ஏற்பாடுகளை மேற்கொண்டு தர வேண்டும்.என அவர்கள் தெரிவித்தனர்.


மடு மாந்தை உதைபந்தாட்ட லீக்கின் நிர்வாக செயற்பாடுகள் குறித்து அதிருப்தி Reviewed by Author on March 20, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.