அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் சினிமா பாணியில் மணல் கடத்தல் ரெளடி கும்பலுடன் வருகை தந்து சான்று பொருட்களை கடத்திய மாபியா

மன்னாரில் தொடர்சியாக மணல் கொள்ளையில் ஈடுபட்டுவரும் நானாட்டான் பிரதேச சபை உறுப்பினர் தலைமையிலான குழுவினர் நேற்றையதினம் பொலிஸ் நிலையத்திற்கு ஒப்படைப்பதற்காக கைப்பற்றி வைத்திருந்த மணல் அகழும் பாரிய இயந்திரத்தை பாதுகாத்து கொண்டிருந்த பொது மக்களையும் அரச அதிகாரிகளையும் தாக்கி சான்று பொருளான மணல் அகழும் இயந்திரத்தை கடத்தி சென்றுள்ளனர் கடந்த வெள்ளிக்கிழமை உரிய அனுமதி இன்றி அரச காணி ஒன்றில் காடுகள் அழிக்கப்பட்டு மணல் அகழ்வுக்கான அடிப்படை நிபந்தனைகளை மீறி 20 அடி ஆலம் வரை தோண்டி மணல் அகழ்வில் ஈடுபட்டு கொண்டிருந்த கும்பளை கைது செய்ய கோரியும் மணல் அகழ்வுக்கு பயண்படுத்திய வாகணத்தை கைப்பற்றவும் பல முறை மாந்தை பிரதேச செயலாளர் அறிவுறுத்தியும் இலுப்பை கடவை பொலிஸார் எந்த கைது நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை அதே நேரம் சான்று பொருட்களையும் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லவில்லை இந்த நிலையில் குறித்த சான்று பொருளை பொது மக்கள் விசேட அதிரடிபடையினரின் உதவியுடன் பாதுகாத்து வந்த நிலையில் நேற்றைய தினம் விசேட அதிரடி படையினர் பாதுகாப்பு கடமையில் இருந்து விலகினர் 

 அதனை தொடர்ந்து அப்பகுதி கிரமசேவகர் மற்றும் கிரம அபிவிருத்தி சங்கத்தினர் சான்று பொருளான JCP இயந்திரத்தை பொலிஸாரிடம் ஒப்படைப்பதற்காக காத்திருந்த நிலையில் நானாட்டான் பிரதேச சபை உறுப்பினரும் மணல் அகழ்வின் உரிமையாளரான ரொஜன் மற்றும் அவருடைய உள்ளூர் சகாக்கள் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினரை தாக்கியதுடன் இரு பெண் கிராம சேவகர்கள் உள்ளடங்களான அரச அதிகாரிகளை தாக்குவதற்கு திரத்தியுள்ளனர் அனைவரும் அங்கிருந்து பாதுகாப்புக்கு வேறு இடங்களுக்கு ஓடி சென்ற நிலையில் மணல் மாபிய கும்பள் சான்று பொருளான JCP இயந்திரத்தை கடத்தி சென்றுள்ளதுடன் அனைத்து விதமான தடையங்களையும் அளித்துள்ளனர் அதே நேரம் அனுமதியற்ற இடங்களில் கொள்ளையிட்ட மணல்களை களஞ்சியப்படுத்தியுள்ளனர் 

 இதுவரை மணல் மாபியா கும்பல் பல சட்டவிரோத நடவடிக்கைகளை மேற்கொண்ட போதிலும் இதுவரை இலுப்பைகடவை பொலிஸார் எந்த வித கைது நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை என்பதுடன் மணல் மாபியா கும்பலுக்கு பொலிஸார் ஆதரவையும் பாதுகாப்பையும் வழங்கி வருவதாக ஆத்திமோட்டை மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர் அதே நேரம் நேற்றைய தினம் அமைச்சரும் மன்னார் அபிவிருத்திகுழு இணைத்தலவருமான காதர் மஸ்தான் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியுடன் உரையாடிய பின்னரும் இதுவரை எந்த ஒரு சட்ட நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்பது குறிப்பிடத்தகது




மன்னாரில் சினிமா பாணியில் மணல் கடத்தல் ரெளடி கும்பலுடன் வருகை தந்து சான்று பொருட்களை கடத்திய மாபியா Reviewed by Author on March 05, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.