அண்மைய செய்திகள்

recent
-

கோழி வளர்ப்பில் வாய்த்தர்க்கம் கொலையில் முடிந்தது- யாழ்ப்பாணம், சுன்னாகத்தில் சம்பவம்

 கோழி வளர்ப்பில் வாய்த்தர்க்கம் கொலையில் முடிந்தது- யாழ்ப்பாணம், சுன்னாகத்தில் சம்பவம்

யாழ்ப்பாணத்தில், உறவினர்களான அயலவர்கள் இடையில் கோழி வளர்ப்பினால் ஏற்பட்ட வாய்த் தர்க்கம் கொலையில் முடிவடைந்துள்ளது.

யாழ்ப்பாணம் – சுன்னாகம் பகுதியில் நேற்று (30) செவ்வாய்க்கிழமை பிற்பகல் இரு நபர்களுக்கிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கொலையில் முடிவடைந்துள்ளது.

இச்சம்பவத்தில் சுன்னாகம் கந்தரோடைப் பகுதியைச் சேர்ந்த சந்திரநாதன் கோபிராஜ் எனும் 36 வயது நபரே உயிரிழந்துள்ளார்.

அயலவர்களான உறவினர்கள் இருவருக்கும் இடையில் கோழி வளர்ப்பினால் பிரச்சினைகள் நிலவி வந்துள்ளன.

இந்நிலையில் நேற்று இறந்தவரின் வீட்டில் வளர்க்கப்பட்ட கோழிகள் சந்தேநபரின் வீட்டுக்குள் நுழைந்ததால் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றி கத்திக்குத்தில் முடிவடைந்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக, சுன்னாக பொலிஸார் தெரிவித்தனர்.

கத்திக்குத்துக்கு இலக்கான நபர் உயிரிழந்ததை அடுத்து , கொலைச் சந்தேகநபரான 54 வயதுடைய அயல் வீட்டு நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் சுன்னாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
கோழி வளர்ப்பில் வாய்த்தர்க்கம் கொலையில் முடிந்தது- யாழ்ப்பாணம், சுன்னாகத்தில் சம்பவம் Reviewed by வன்னி on January 31, 2024 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.