அக்கினியுடன் சங்கமித்தது சம்பந்தனின் பூதவுடல்
தமிழ் தேசிய கூட்டமைப்பின் பெருந்தலைவரான மறைந்த இராஜவரோதயம் சம்மந்தனின் பூதவுடல் தகனம் செய்யப்பட்டுள்ளது.
திருகோணமலையில் உள்ள இந்து மயானத்தில் சற்றுமுன்னர் அவரது உடல் தகனம் செய்யப்பட்டுள்ளது.
அவரின் இறுதிக் கிரியைகளில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங், தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பிரமுகர்கள், பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
வயது மூப்பு, உடல்நலக்குறைவு காரணமாகக் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்றுவந்த இரா.சம்பந்தன் கடந்த ஜூன் மாதம் 30 ஆம் திகதி இரவு தமது 91 ஆவது வயதில் சிகிச்சை பலனின்றி காலமானார்.
இதனையடுத்து, கொழும்பில் உள்ள தனியார் மலர்சாலையொன்றில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த அவரது பூதவுடல் புதன்கிழமை நாடாளுமன்றில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
பின்னர், அவரின் பூதவுடல் யாழ்ப்பாணத்துக்கு கொண்டு செல்லப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டதையடுத்து, திருகோணமலையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று மாலை வரை அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்து.
பின்னர் இறுதி கிரியைகள் இடம்பெற்று சற்றுமுன்னர் சம்பந்தனின் பூதவுடல் தகனம் செய்யப்பட்டுள்ளது.
Reviewed by Author
on
July 07, 2024
Rating:


No comments:
Post a Comment